மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியர்கள் அனைவரும் மோடியை பாராட்டுகின்றனர்… அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியர்கள் அனைவரும் பிரதமர் மோடியை பாராட்டி வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு-வீடியோ

    மதுரை: சாதி, மத வேறுபாடுகளை கடந்து இந்தியர்கள் அனைவரும் பிரதமர் மோடியை பாராட்டி வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

    மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் ஈராண்டு சாதனையை விளக்க கூடிய வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர்கள் தொடங்கி வைத்தனர்.

    all indians appreciate pm modi minister sellur raju talks

    பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்: கூட்டணி குறித்து பேசுவதற்கு அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட குழு தொடர்ந்து கூட்டணியில் இணைய உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    தேமுதிக அதிமுக கூட்டணிக்கு வருமா என்பது குறித்து தலைவர்கள் தான் சொல்ல வேண்டும். பாகிஸ்தான் நாட்டுடன் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் குறித்து எதிர்கட்சிகள் மட்டுமல்லாமல் இந்திய நாடே பாராட்டுகிறது.

    all indians appreciate pm modi minister sellur raju talks

    சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இந்தியர்கள் பிரதமர் மோடியை பாராட்டி வருவதாகவும் கூறினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் மதுரை மாநகர் முழுவதும் இரவு நேரங்களில் பல இடங்களில் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்று வருகிறது.

    அனைத்து கூட்டத்திலும் மோடி அவர்களை அமைச்சர் செல்லூர் ராஜு புகழ்ந்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது தற்போதைய கூட்டணிகான நாடகம் எனறு எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்கள் பேசி வருகின்றனர்.

    all indians appreciate pm modi minister sellur raju talks
    English summary
    Minister sellur raju said that indians are praising prime minister Modi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X