கூட்டணி எந்த நேரத்திலும் மாறலாம்.. செல்லூர் ராஜு திடீர் தகவல்
Recommended Video

மதுரை: தேமுதிகவுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். அதிமுக கூட்டணியில் எந்த நேரத்திலும் மாற்றம் வரலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
மதுரை எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜு பேசினார். அவரது பேச்சிலிருந்து...
இன்று தமிழ்நாடு முழுவதும் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. பஸ் நிலையம், ரயில் நிலையம், பள்ளிகள், நகரின் முக்கிய இடங்கள், பெண்கள் வேலை செய்யும் செங்கல் சூளைகள் உள்ளிட்ட இடங்களில் முகாம் அமைத்து சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 43 ஆயிரத்து 51 மையம் போலியோ சொட்டு மருத்து கொடுக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் 7 ஆயிரம் ஊழியர்கள் இந்த பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இது போக தமிழ் நாடு முழுவதும் ஆயிரம் நடமாடும் குழுக்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. மதுரையில் 15 நடமாடும் குழுக்கள் செயல்படுகின்றன.
தேமுதிக பொறுத்த வரை முதல்வர், துணை முதல்வர் கூட்டணி குறித்து பேசி வருகின்றனர். விரைவில் அவர்கள் முறைப்படி அறிவிப்பார்கள்.
கூட்டணி எந்த நேரமும் மாறலாம். ஊடகங்கள் கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் கூற முடியாது.
நான் பிரேமலதா விஜயகாந்த் பேசியதை முழுமையாக பார்க்கவில்லை. . மதுரையை பொறுத்தவரை எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு இந்த ஐந்தாண்டுகளில் அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. மதுரை நகருக்குள் பேருந்துகள் வராமல் சுற்றுச் சாலை விரிவுபடுத்தும் வேலையும் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார் ராஜு.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications