மதுரையில் 4-வது முறையாக யாசகம் பெற்று அரசுக்கு நிதி கொடுத்த யாசகர் பூல்பாண்டியன்
மதுரை: மதுரையில் பொதுமக்களிடம் 4-வது முறையாக யாசகம் பெற்று அரசுக்கு கொரோனா நிதி சேகரித்து கொடுத்தார் யாசகர் பூல் பாண்டியன்.
Recommended Video

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன். இரு மகன்கள் , ஒரு மகள் என 3 பிள்ளைகளுடன் வாழ்ந்துவந்த நிலையில் மனைவி இறந்தபின்பு பொதுசேவையில் அதிக ஆர்வம்கொண்டவராக பூல் பாண்டியன் மாறினார்.

பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று அந்த பணத்தை பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்துவருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் மதுரைக்கு வந்த நிலையில் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டதால் அரசு பள்ளியில் தங்கியபடி மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்ற ரூ10,000 பணத்தை கடந்த மாதம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார்.

இப்படி 3 முறை வழங்கிய நிலையில் இன்று மேலும் 4 வது முறையாக ரூ10,000 வசூல் செய்து அதனை கொரோனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயிடம் வழங்கினார் பூல் பாண்டியன். இவர் ஏற்கனவே யாசகம் பெற்று புயல் நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளை செய்துவருகிறார்.
பூல்பாண்டியனின் சேவையை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். ஆண்டுதோறும் காமராஜர் பிறந்தநாளான கல்வி வளர்ச்சி நாளில் பள்ளிகளுக்கு உதவிசெய்வதை வழக்கமாக கொண்ட பூல்பாண்டியன் தற்போது கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்படும் ஏழை எளியோருக்கு உதவும் வகையிலான நிதி வழங்கிவருகிறார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications