திணறும் வட மாநிலங்கள்.. ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் மதுரையிலிருந்து.. உபி-க்கு அனுப்பி வைப்பு
மதுரை: ஆக்சிஜன் தட்டுப்பாட்டைச் சமாளிக்க உதவும் வகையில், ஆக்சிஜன் தயாரிக்கும் சிறிய ரக இயந்திரங்கள் மதுரையில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை மிக மோசமாக உள்ளது. நாடு முழுவதும் தற்போது 28 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. டெல்லியிலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் தங்களிடம் சில மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே உள்ளதாகத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. இந்த பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழக்கும் அபாயகரமான நிகழ்வுகளும் நிகழ்ந்துள்ளன.
இந்நிலையில், சிறிய ரக ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரங்கள் நேற்றிரவு மதுரையில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவும் எனக் கூறப்பட்டுள்ளது.
திருநெல்வேலி தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரங்கள் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இந்த ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரங்கள் சுமார் 20 கிலோ எடை கொண்டவை. இந்த இயந்திரங்கள் மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக சுமார் 700 கிலோ வரையிலான திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யமுடியும்.
முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றும் இது தொடர்பாக தவறான செய்திகளைப் பரப்புவோர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்றும் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications