திமுகவுக்கு எதிரான ‘ரூட் மேப்’.. கையில் முக்கிய ஃபைலுடன் மதுரைக்கு வந்துள்ள அமித்ஷா.. பரபர பாஜக!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மதுரை விசிட், அரசியல் களத்தில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. சட்டசபை தேர்தல் வியூகங்கோடு, திமுகவுக்கு எதிரான பிரச்சாரத்தின் 'ரூட் மேப்' உடன் அவர் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தன் கவனத்தை தமிழகத்தின் பக்கம் திருப்பியுள்ளது. இந்த முறை பாஜக தமிழ்நாட்டில் வலுவான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதில் பாஜக மேலிடமும் உறுதியாக இருக்கிறது.

Amit shah madurai bjp

அமித் ஷாவின் நேரடி பார்வையில்

அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக உள்ளிட்ட முக்கிய கட்சிகளை கொண்டு வரும் முனைப்பில் பாஜக உள்ளது. தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சிகளை சேர்ப்பதிலும், பாஜகவை கட்டமைப்பு ரீதியாக பலப்படுத்தும் பணிகளையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக கவனித்து வருகிறார்.

இந்நிலையில் மதுரையில் பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மதுரையில் அமித் ஷா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பது தொடர்பாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனை வழங்க இருக்கிறார் அமித் ஷா. இதில் மண்டல அளவிலான நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.

மதுரையில் நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு பதில் தரும் வகையில் அமித்ஷாவின் இன்றைய பேச்சு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல திட்டங்களுடனும் அமித் ஷா மதுரைக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டுக்கு குறி

கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலைத் தொடர்ந்து, மாநில தேர்தல்களிலும் வெற்றி பெற்றியுள்ள பாஜக, தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை குறி வைத்துள்ளது. இதற்காகவே அமித் ஷா நேரடியாகவே களமிறங்கி இருக்கிறாராம்.

மதுரை வந்துள்ள அமித் ஷா, பல்வேறு குறிப்புகளை ஃபைலாக கொண்டு வந்திருக்கிறாராம். திமுக மீது மக்கள் மத்தியில் பரவலாக இருக்கக்கூடிய விமர்சனங்கள், அவற்றில் எதை எல்லாம் பாஜக கையில் எடுத்து களமாடலாம் என்ற ரூட் மேப்போடுதான் மதுரைக்கு விசிட் அடித்திருக்கிறாராம் அமித் ஷா.

அமித் ஷா கையில் டேட்டா

மத்திய உளவு அமைப்புகள் மூலமாக திமுகவுக்கு எதிராக தனக்கு கிடைத்துள்ள விவரங்களை கையில் வைத்துக்கொண்டு தான் மதுரை வரும் பிளானையே ஆரம்பித்தார் அமித் ஷா என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தினர்.

மேலும், ஆர்.எஸ்.எஸ் தரப்பிலும், தமிழ்நாடு முழுவதும் கள ஆய்வு செய்யப்பட்டுள்ளதாம். அந்த தகவல்கள் உடனுக்குடன் அமித் ஷா டேபிளுக்குச் சென்றுள்ளன. அதில், 2026 சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக பல தகவல்கள் உள்ளதாம்.

இதை எல்லாம் கையில் வைத்துக்கொண்டு, பாஜக தலைகளோடு ஆலோசனை நடத்திய பின்னர் தான், இன்று நிர்வாகிகள் கூட்டத்தில் பேச இருக்கிறாராம் அமித் ஷா. 2026 சட்டசபை தேர்தலுக்கு திமுகவுக்கு எதிராக பிரச்சார வியூகங்களை எப்படி செட் செய்வது, எதை முக்கியமான விஷயமாக முன்னெடுப்பது பற்றிய ஆலோசனைகளை வழங்க இருக்கிறாராம் அமித் ஷா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+