அதிமுக பேனர்களைக் கிழித்தெறிந்த அமமுக.. உசிலம்பட்டியில் பதட்டம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

உசிலம்பட்டியில் அதிமுக பேனர்களைக் கிழித்தெறிந்த அமமுக..வீடியோ
உசிலம்பட்டி: மறைந்த பி.கே.மூக்கையாத்தேவர் 97வது பிறந்த தினத்தையொட்டி அதிமுகவினர் வைத்திருந்த பேனர்களை அமமுக கட்சியினர் கிழித்தெறிந்ததால் உசிலம்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

மறைந்த முன்னாள் பார்வட் ப்ளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும் மூன்றுமுறை உசிலம்பட்டியின் சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த பி.கே.மூக்கையாத்தேவரின் 97வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமமுக சார்பில் தேனி பாராளுமன்ற வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் தலைமையில் அமமுக கட்சியினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

அதேசமயம், அந்தப் பகுதியில் அதிமுகவினரும் பேனர் வைத்திருந்தனர். இதைப் பார்த்த அமமுகவினர் ஆத்திரமடைந்து பேனர்களைக் கிழித்தெறிந்தனர். அத்தோடு நில்லாமல் அவற்றை தீவைத்தும் எரித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு அமமுகவினரை தடுத்தனர்.

தேனி அதிமுக வேட்பாளராக போட்டியிடுபவர் துணை முதல்வர் ஓ.பன்னீல்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் ஆவர். அவரது பெயர் அடங்கிய பேனர்கள் கிழித்தெறியப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மோதல் வெடித்து விடாமல் தடுக்க போலீஸார் குவிக்கப்பட்டனர்.
More From
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications