இந்த 2 பேர் போதும்.. நாங்க ஈஸியா ஜெயிச்சிருவோம்.. டீம் தினகரன் செம நக்கல்!
திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video

மதுரை: "திருவாரூரில் ஓபிஎஸ், இபிஎஸ் இவங்க 2 பேர் பிரச்சாரம் செய்தாலே போதும், நாங்கள் ஈசியா ஜெயிச்சிடுவோம்" என்று அமமுக ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி எப்போது பேசினாலும், எதை பேசினாலும் அங்கு அதிமுகவை ஒரு "இடி" இடிக்காமல் விட மாட்டார்.
போன வாரம்கூட கோவையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "அமைச்சர் ஜெயக்குமார் ஒரு அரசியல் அனாதை. கருணாநிதி வீடு பார்த்திருக்கிறோம், போயஸ் கார்டன் வீடு பார்த்திருக்கிறோம், ஆனால் ஜெயக்குமார் வீட்டை போல நாம யாருமே பார்த்திருக்க மாட்டோம்.

ஜெயக்குமார் வீடு
ஒரு மிகப்பெரிய மன்னர் மாளிகை போன்று இருக்கும். ஒரு தெருவில் ஆரம்பித்து, இன்னொரு தெருவில் அவர் வீடு முடியும், எப்படித்தான் அதையெல்லாம் அவர் சம்பாதித்தாரோ?" என்றார்.

பைத்தியம் பிடித்ததுபோல்..
சாதாரணமாகவே புகழேந்தியின் பேச்சு எப்போதுமே இப்படித்தான் பரபரப்பாக இருக்கும். இப்போது இடைத்தேர்தல் நெருங்கிவிட்டதால், பேச்சில் அரசியல் நெடியும் சேர்ந்து அடிக்கிறது. ஒரே ஒரு இடைத்தேர்தலில் ஜெயித்ததற்கே பைத்தியம் பிடித்தவர்கள்போல அதிமுக அமைச்சர்கள் புலம்புகிறார்கள் என்று இதற்கு முன்பே புகழேந்தி தெரிவித்தார்.

தனது பாணியில் பேட்டி
இப்போது திருவாரூர் இடைத்தேர்தலை பற்றியும் தன் பாணியிலேயே கருத்து சொல்லி இருக்கிறார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது:

ஓபிஎஸ், ஈபிஎஸ்
"திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பிரச்சாரம் செய்தாலே போதும். நாங்கள் ரொம்ப எளிதாக ஜெயித்து விடுவோம், என்று கருத்து தெரிவித்துள்ளார்.

கலைஞர் தொகுதி
மேலும் அவர் சொல்லும்போது, "திருவாரூரில் எந்த கட்சியில், யார் போட்டியிட்டாலும் சரி, அவரை எதிர்கொள்ள அமமுக தயாராக உள்ளது. ஆனால் கலைஞர் இடத்தில் யாரையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு திருவாரூர் மக்களுக்கு விருப்பம் இல்லை. திருவாரூர் போலவே 18 தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் வரவேண்டும்" என்றார்.
-
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா












Click it and Unblock the Notifications