மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓபிஎஸ்சுக்கும் , அவரது மகனுக்கும் தேனி மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. தங்க தமிழ்செல்வன் சாபம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓபிஎஸ்சுக்கும் , அவரது மகனுக்கும் தேனி மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. தங்க தமிழ்செல்வன் சாபம் -வீடியோ

    மதுரை: ஓபிஎஸ்சுக்கும் , அவரது மகனுக்கும் தேனி மக்கள் பாடம் புகட்டுவார்கள். 40தொகுதிகளிலும், 18 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அமமுக அமோக வெற்றி பெறும். இதை சவாலாகாவே கூறுகிறேன் என்று தேனி தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

    மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அமமுக கழக கொள்கைபரப்பு செயலாளரும், தேனி லோக்சபா தொகுதி வேட்பாளருமான தங்கதமிழ்செல்வன். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் பாஜகவிற்கு மாற்றும், தமிழகத்திற்கு மாற்றம் வேண்டும் என்பது தான் தற்போதைய நாடாளுமன்ற தேர்தலின் நிலை.

    AMMK will defeat ADMK in Theni, says Thanga Tamilselvan

    புதிய தலைமையை தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த புதிய தலைமை டிடிவி தினகரனே. இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனி தொகுதியில் வெற்றி பெற்று 10ஆண்டுகளாக அங்கயே தங்கி மக்கள்நலத்திட்டங்களை செயல்படுத்தினார்.

    தேனி மாவட்டம் ஓபிஎஸ்சின் குடும்பத்தால் மன்னர் ஆட்சி போல செயல்படுகிறது. ஓபிஎஸ்சுக்கும் அவரது மகனுக்கு தேனி தொகுதி மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். வாரிசுக்கு இடம் அளிக்காமல் தொண்டனுக்கு வாய்ப்பு அளிக்கும் கட்சி அமமுக. சின்னம் இல்லை, கட்சி பதிவில்லை என்றபோதிலும் தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பது கட்சியின் பிரமாண்ட வளர்ச்சியை காட்டுகிறது.

    அண்ணனுக்கு வியர்க்குது.. உதயநிதிக்கு துடைத்து விட்ட திமுக வேட்பாளர்.. வெடித்தது சர்ச்சை!அண்ணனுக்கு வியர்க்குது.. உதயநிதிக்கு துடைத்து விட்ட திமுக வேட்பாளர்.. வெடித்தது சர்ச்சை!

    தேனியில் மருத்துவ கல்லூரி, சாலை, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை டிடிவி கொண்டுவந்தார். மதுரையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை தேனிக்கு கொண்டுவர வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றுவேன். தேனியில் தேர்தல் ஆணையம் நேர்மையாக நடைபெறும் என நம்புகிறோம்.

    தேனி தொகுதியில் ஓபிஎஸ் குடும்பத்தினர் மக்களுக்கு பணத்தை வாரி இறைக்கிறார்கள். 40 நாடாளுமன்ற தொகுதியிலும், 18 இடைத்தேர்தலிலும் கழகம் வெற்றி என்பது சவால். உண்மையான அதிமுக தொண்டர்கள் தாமரைக்கு வாக்களிக்கமாட்டார்கள். அமமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள். வாக்காளர்களுக்கு பண பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் , சில அதிகாரிகள் ஆளும் அரசுக்கி ஆதரவாக செயல்படுகிறார்கள் என்றார் அவர்.

    English summary
    AMMK Theni candidate Thanga Tamilselvan has said that AMMK will defeat all ADMK candidates and in 18 Assembly by elections too.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X