மல்டி லெவல் பார்க்கிங்.. ஸ்கைவாக்.. மொத்தமாக மாறும் மதுரை ரயில் நிலையம்.. இவ்வளவு வசதிகளா? ஆஹா!!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையில் உள்ள சந்திப்பு ரயில் நிலையம் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மல்டி லெவல் பார்க்கிங், சுரங்கப்பாதைகளுடன் முழு வீச்சில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு ரயில் நிலையங்களின் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 900 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போதைய நவீன வசதிகளுடன் உட்கட்டமைப்புகளை பழமை மாறாமல் மாற்றியமைக்க பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

Madurai Railway Railway Station

மதுரை ரயில் நிலையம்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வே 9 ரயில் நிலையங்களை மேம்படுத்துகிறது. தமிழகத்தின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான மதுரை ரயில் நிலையமும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுகின்றன. மதுரையை பொறுத்தவரை தூங்கா நகரம் என்ற பெருமைக்குரியது. 24 மணி நேரமும் பரபரப்பாக காட்சியளிக்கும் மதுரையில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

அம்ரித் பாரத் திட்டம்: திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோயில் போன்ற தென் பகுதிகளுக்கு செல்ல முக்கிய சந்திப்பாக மதுரை உள்ளது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து நேரடி ரயில், பஸ் கிடைக்காத தென் மாவட்ட பயணிகள் மதுரை வந்தே அங்கிருந்து மாறி செல்வதை பார்க்க முடியும். இதனால், நள்ளிரவு கூட பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்க கூடிய நகரமாக மதுரை உள்ளது.

அதுமட்டுமின்றி மதுரையில் உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து ஆன்மீக பயணமாக பலரும் வருகை தருகிறார்கள். இதனால், மதுரை ரயில் நிலையம் என்பது எப்போதும் பரபரப்பு நிறைந்த ஒன்றாகவே உள்ளது. இதனால், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மதுரை ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

பாண்டியர் கால மீன் சின்னம்: மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் போன்ற வடிவமைப்புடன் இந்த ரயில் நிலையம் மேம்படுத்தப்படுகிறது. ரூபாய் 347.47 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் மாற்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை ரயில் நிலைய கட்டிடத்தின் வெளிப்புறம் சிறு கோவில் கோபுரம் போன்றும் உள்பக்கம் பாண்டியர் கால மீன் சின்னம் போன்ற சிலைகளிலும் உள்ளன. எனவே இந்த பழமை மாறாமல் புதுப்பிக்க கூடிய வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாதிரி புகைப்படங்கள்: மதுரை ரயில் நிலையத்தின் மாதிரி புகைப்படங்களும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டன. தற்போது முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில் நிலையத்தில் வரும் பயணிகளின் வசதிக்காக மல்டி லெவல் பார்க்கிங்க் ஒன்று அமைக்கப்படுகிறது. இதில் 450 க்கும் மேற்பட்ட பைக்குகள்.. 200 க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்தக் கூடிய வகையில் பிரமாண்ட பார்க்கிங் கட்டுமான பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.

சுரங்கப்பாதை, ஸ்கைவாக்:
அது போக பெரியார் பேருந்து நிலையத்திற்கு செல்லும் வகையில் சுரங்கப்பாதை, சரக்குகளை எளிதில் கையால ஸ்கைவாக் போன்றவைகளும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை ரயில் நிலையத்தை பொறுத்தவரை தினமும் சுமார் 96 ரயில்கள் வந்து செல்கின்றன. இதனை எல்லாம் கருத்தில் கொண்டு மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

50% பணிகள் நிறைவு: பார்சல் கையாளும் தனிப்பகுதி, லிஃப்ட்கள், எஸ்கலேக்டர்கள் ஆகியவற்றிற்கான பணிகளும் நடைபெற உள்ளன. இதுவரை 50 % பணிகள் முடிந்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 2025 -ஆம் ஆண்டில் இந்த பணிகள் அனைத்தும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை ரயில் நிலையம் சர்வதேச தரத்தில் மாறும் பட்சத்தில் ரயில்களின் எண்ணிக்கையும் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+