அரசால் எல்லாமே செய்ய முடியாது.. பெண் பிள்ளைகளை பெற்றோர் தான் பாதுகாக்கணும் - மதுரை ஆதீனம்
மதுரை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மதுரை ஆதீனம்,‛‛பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் பெற்றோர்கள்தான் பெண் பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். எல்லாமே அரசால் செய்ய முடியாது. ஒவ்வொரு பெண்ணிற்கும் தனித்தனியே காவலர்கள் போடமுடியாது'' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்து மாணவியை மிரட்டி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் மொத்த தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே தான் ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர். திமுகவை சேர்ந்த அமைச்சருடன் நெருக்கமாக இருப்பதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
தற்போது இந்த விவகாரம் ஆளும் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து பல இடங்களில் தடையை மீறி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் மதுரை ஆதீனம் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இந்த விவகாரம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, மதுரை ஆதீனம், ‛‛பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் பெற்றோர்கள்தான் பெண் பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். எல்லாமே அரசால் செய்ய முடியாது. ஒவ்வொரு பெண்ணிற்கும் தனித்தனியே காவலர்கள் போடமுடியாது. அப்படிச் செய்தால் போலீஸுக்கு அந்த வேலையை பார்ப்பதற்குத்தான் நேரம் சரியாக இருக்கும்.
பெற்றோர்கள், ஆசிரியர்கள் பிள்ளைகளை கட்டுப்பாடாக வளர்க்க வேண்டும். என்னை என் வீட்டில் கட்டுப்பாட்டோடு வளர்த்துள்ளார்கள்" என கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications