'Cult' சமூகமாக இருக்க கூடாது.. மாணவர்கள் அந்த விஷயத்தில் வெளியில் வர வேண்டும்.. அண்ணாமலை அட்வைஸ்!
மதுரை: மாணவர்கள் மத்தியில் கல்ட் என்ற விஷயம் அழிய வேண்டும் என்று வி தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் எல்லோரும் தலைவர்களாக உருவாக வேண்டும் என்று கூறிய அண்ணாமலை, பிராண்ட்டை கொண்டாடுவதில் இருந்து வெளியில் வாருங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வீ தி லீடர்ஸ் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். ஏற்கனவே இந்த அமைப்பு சார்பாக பொள்ளாசியில் போதையில்லா பொள்ளாச்சிஎன்ற மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டிற்கு சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நேரில் வந்து பங்கேற்றனர். இதனால் அண்ணாமலை புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்து வருவதாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும் அண்ணாமலை இளைஞர்களை தங்கள் பக்கம் ஈர்க்க தீவிரமாக பணியாற்றி வருகிறார். அதற்காக பள்ளி மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகளில் அண்ணாமலை பங்கேற்பது தொடர்கதையாகி இருக்கிறது. இந்த நிலையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் அண்ணாமலை பேசுகையில், உலகளவில் வேகமாக வளரும் நாடாக இந்தியா இருக்கிறது.
நிறைய மாற்றம் நடக்கக் கூடிய யுகத்தில் மாணவர்களாக இருப்பது ஒரு பாக்கியம். எதை நீங்கள் உருவாக்குவதற்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கிறீர்களோ, அவர்களுக்கு தான் சமுதாயம் முக்கியத்துவம் கொடுக்கும். உருவாக்குவது மிகவும் கடினமான வேலை. அதனை பராமரிப்பது மிகவும் எளிதான வேலை. ஒரு அன்பான வேண்டுகோள்.. வரும் நாட்களில் இந்தியாவில் மிகப்பெரிய பிராண்ட்கள் இருக்கும்..
பிராண்ட்களுக்கு மத்தியில் தான் உங்களின் வாழ்க்கை இருக்க போகிறது. யாரோ ஒருவர் இன்ஃபுளூயன்ஸ் செய்வதை தான் வாங்க போகிறீர்கள். சினிமாவில் நடிக்க கூடிய நடிகைகள் காஸ்மட்டிங் க்ரீமை வாங்குங்கள் என்று விளம்பரத்தில் நடிப்பார்கள். ஆனால் அவர்களே அதனை பயன்படுத்த மாட்டார்கள். நம்மிடம் பொருளை விற்பனை செய்கிறார்கள். இதில் இருந்து மாணவர்கள் வெளியில் வர வேண்டும்.
கல்ட் vs காமன் என்பதில் இருந்து நீங்கள் வெளியில் வர வேண்டும். உங்கள் தலைமுறையில் கல்ட் என்பது அழிய வேண்டும். எல்லோரும் சமம்.. எல்லோரும் முன்னேற வேண்டும்.. எல்லோரும் தலைவர்களாக மாற வேண்டும்.. தலைமைப் பண்பை உருவாக்கி கொள்ள வேண்டும். சமுதாயத்தின் அடிப்படை பிரச்சனைகளை மாற்ற உங்களின் வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும். நல்லது செய்வதற்காக பணியாற்ற வேண்டும். நீங்கள் டிகிரி வாங்கும் போது 3 ஆயிரம் மாணவர்களையும் 3 ஆயிரம் தலைவர்களாக அழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
