குற்றச்சாட்டே திமுக அரசு மீதுதான்.. அதுகூட தெரியாம அரசியல் செய்ய கிளம்பிட்டார் ஸ்டாலின்: அண்ணாமலை
மதுரை: மதுரை சின்னப்பிள்ளைக்கு பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படாமல் இருந்து வந்தது பற்றி முதல்வர் ஸ்டாலின் அறிந்து, வீடு வழங்க உத்தரவிட்ட நிலையில், "சின்னப்பிள்ளை வைத்தது திமுக அரசின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்பது கூடத் தெரியாமல் அரசியல் செய்யப் கிளம்பியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்." என விமர்சித்துள்ளார் அண்ணாமலை.
மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தை சேர்ந்த சின்னப் பிள்ளை கடந்த 2000ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாய்பாயிடம் இருந்து ஸ்த்ரிசக்தி புரஸ்கார் விருது பெற்றவர். விருது வழங்கும்போது சின்னப் பிள்ளை காலில் வாஜ்பாய் விழுந்து வணங்கியது அப்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவமாக இருந்தது. 2019ஆம் ஆண்டு சின்னப் பிள்ளைக்கு பதமஸ்ரீ விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தற்போது வீடு இல்லாமல் தனது மூத்த மகன் வீட்டில் வசித்து வருகிறார் சின்னப் பிள்ளை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் வீடு வழங்கப்படும் என உறுதி அளித்ததாகவும், அதன்பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் தெரிவித்த சின்னப் பிள்ளை, தனக்கு வீடு கட்டித் தருமாறு உருக்கமாக கோரிக்கை விடுத்தார்.
ஸ்டாலின் உடனடி உத்தரவு: மதுரை சின்னப்பிள்ளையின் கோரிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்குச் சென்ற நிலையில், புதிய வீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தினார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "பத்மஸ்ரீ சின்னப் பிள்ளை பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தனக்கு உறுதியளிக்கப்பட்ட வீடு இதுவரை வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் பேசிய காணொளியைக் கண்டேன்.
கவலை வேண்டாம்.. ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்ட வீட்டுமனையுடன் கூடுதலாக 380 சதுர அடி நிலத்துக்கான பட்டா வழங்கப்பட உள்ளது. மேலும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சின்னப் பிள்ளைக்கு புதிய வீடும் வழங்கப்படும். இந்த மாதமே கட்டுமானப் பணிகள் தொடங்கும்" என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்காக மதுரை சின்னப்பிள்ளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.
அண்ணாமலை பதிலடி: இதற்கிடையே, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "மத்திய அரசு நிதி வழங்கி, மாநில அரசின் வழியே செயல்படுத்தப்படும் திட்டம்தான் பிரதமரின் வீடு திட்டம். பயனாளிகளைக் கண்டறிந்து மத்திய அரசின் நிதியைக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிடம் உள்ளது என்பது கூடத் தெரியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இருப்பது வேதனைக்குரியது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, பத்மஸ்ரீ சின்னப் பிள்ளை அம்மா அவர்களுக்கு, வீடு கட்ட நிதியும் இடமும் வழங்காமல் அலைக்கழித்திருப்பது என்பது, திமுக அரசின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்பது கூடத் தெரியாமல் அரசியல் செய்யப் கிளம்பியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
ஸ்டிக்கர் ஒட்ட கிளம்பிவிட்டார் ஸ்டாலின்: அது மட்டுமல்லாது, மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட பின்னர் வீடு கட்ட வெறும் ஒரு சென்ட் நிலத்தை மட்டுமே தாசில்தார் வழங்கியிருக்கிறார். அது குறித்துப் பலமுறை முறையிட்ட பின்னரும், அதற்கு எந்தத் தீர்வும் காணப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை அம்மா அவர்கள். இவை அனைத்தையும் மறைத்து விட்டு, வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டப் புறப்பட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்." எனத் தெரிவித்துள்ளார்.
-
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்?












Click it and Unblock the Notifications