அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு.. சிபிஐ விசாரணை நடத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு
மதுரை: அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவியின் மரணத்தில் சிபிசிஐடி விசாரணை வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் வழக்கு தொடுத்த நிலையில் மதுரை ஹைகோர்ட் கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது
Recommended Video
தஞ்சாவூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த அரியலூர் மாணவி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இவர் ஹாஸ்டல் வார்டன் கொடுத்த தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஹாஸ்டல் வளாகத்தை சுத்தம் செய்ய சொல்லியும், திருட்டு பட்டம் கட்டியும் ஹாஸ்டல் வார்டன் சகாய மேரி தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சகாய மேரி கைது செய்யப்பட்டுவிட்டார்.

வாக்குமூலம்
மேஜிஸ்டிரேட்டிடம் மாணவி கொடுத்த வாக்குமூலத்திலும் இதே புகார் வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மாணவியை மத மாற்றம் செய்ய பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியது. அதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாணவி வாக்குமூலமாக கொடுத்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கோரிக்கை
இந்த நிலையில் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதில் பள்ளி நிர்வாகம் மதம் மாற்றம் செய்ய அழுத்தம் கொடுத்ததாகவும் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதோடு மாணவி மரணம் குறித்து போலீஸ் விசாரணை சரியில்லை. இதில் போலீசார் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறார்கள். எனவே இதை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்றும் மாணவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். அதோடு இது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கும் தொடுத்தனர்.

விசாரணை
கடந்த அமர்வில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பு புதிய கோரிக்கை விடுத்தனர். மதுரை ஹைகோர்ட் நீதிபதி ஜீ ஆர் சுவாமிநாதன் இந்த வழக்கை விசாரித்து வந்தார். இந்த வழக்கில் மாணவியின் கடைசி வீடியோவை எடுத்த நபரின் வாக்குமூலத்தை போலீஸ் பெற்று அதை கோர்டில் சமர்ப்பித்து இருந்தனர். இந்த வழக்கின் கடந்த அமர்விலேயே விசாரணை முடிந்துவிட்ட நிலையில் தீர்ப்பு மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி இன்று மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று உத்தரவு
இந்த வழக்கின் கடந்த அமர்விலேயே விசாரணை முடிந்துவிட்ட நிலையில் தீர்ப்பு மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி இன்று மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று இந்த வழக்கு நீதிமன்றத்தில் பட்டியல் இடப்படாத நிலையில் திடீரென தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பெரும்பாலும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுதுகிறது.
-
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications