துவரங்குறிச்சி -நத்தம் -மதுரை சாலையில் நள்ளிரவு வழிப்பறி முயற்சி! அதிர்ச்சி விலகாத ஓட்டுநரின் ஆடியோ!
மதுரை: துவரங்குறிச்சி -நத்தம் -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு நேரத்தில் வழிப்பறி கொள்ளை முயற்சி நடந்ததாக அதிர்ச்சி கலந்த ஆடியோ குரல் பதிவை வெளியிட்டுள்ளார் மதுரை பசுமலையை சேர்ந்த ஓட்டுநர் தினேஷ்.
திருச்சியிலிருந்து துவரங்குறிச்சி -கொட்டாம்பட்டி -மேலூர் -வழியாக மதுரை செல்லலாம். இந்த சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகம் என்பதால், தொலைநோக்கு பார்வையுடன் துவரங்குறிச்சி -நத்தம் - வழியாக மதுரைக்கு அண்மையில் 64 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய சாலை அமைக்கப்பட்டது. அதில் 7 கிலோ மீட்டர் மதுரையை ஒட்டி பறக்கும் பாலம் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை தல்லாகுளத்தில் ஆரம்பிக்கும் இந்த சாலை ஊருக்குள் செல்லாமல் நேராக துவரங்குறிச்சியில் முடிகிறது. முற்றிலும் பைபாஸ் வழி என்பதால் ஆள் அரவற்றமாக சாலையாகவே இது காட்சியளிக்கிறது. பகலிலேயே போதுமான எண்ணிக்கையில் இன்னும் வாகனப் போக்குவரத்து இல்லை. இந்நிலையில் சென்னைக்கு சவாரி சென்றுவிட்டு டவேரா காரில் மதுரை திரும்பிக்கொண்டிருந்த ஓட்டுநர் தினேஷ், நள்ளிரவு 2.30 மணியளவில் நத்தம் பைபாஸை தாண்டி சத்திரப்பட்டி அருகே காரில் ஐந்தாறு கற்கள் வந்து விழுந்ததாக அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தாம் வாகனத்தை நிறுத்தவே இல்லை என்றும் மதுரை தமுக்கம் அருகே வந்து காரை நிறுத்தி இறங்கி பார்த்த போது, வழிப்பறி கொள்ளை முயற்சியில் காரை நிறுத்துவதற்காக கற்கள் வீசப்பட்டதை கண்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல் மற்றொரு ஓட்டுநரும் சில நாட்களுக்கு முன்னர் நான்கைந்து சிறுவர்கள் டார்ச் லைட் அடித்து தனது வாகனத்தை நிறுத்த முயற்சித்ததாகவும் தாம் நிறுத்தாமல் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
பெனியல் பள்ளி அருகே மட்டும் செக் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது என்பதும் மற்றபடி மதுரை -நத்தம் -துவரங்குறிச்சி சாலையில் ரோந்து போலீஸார் பணியமர்த்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வாகனப் போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கினால் வழிப்பறி என்ற அச்சத்திற்கே இடமிருக்காது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications