அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 19 காளைகளை அடக்கி.. காரை பரிசாக பெற்ற திருப்பரங்குன்றம் கார்த்தி
மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. திமிறி வந்த காளைகளை அடக்கி மாடுபிடி வீரர்கள் கெத்து காட்டினர். இன்று நடந்த 11 சுற்றுகளில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கார்த்தி முதல் பரிசான காரை பரிசாக பெற்றுள்ளார். அரவிந்த் திவாகர் 15 காளைகளை அடக்கி இரண்டாம் இடமும், 13 காளைகளை அடக்கி முரளிதரன் 3வது இடமும் பெற்றனர்.
இன்று பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதேபோல் பொங்கல் பண்டிகை தினமான இன்று தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியும் நடந்தது. இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதனை இன்று காலையில் அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடந்தன. ஒவ்வொரு சுற்றிலும் மாடுபிடி வீரர்கள் திமிறி வந்த காளைகளை அடக்கி கெத்து காட்டினர். வீரர்களுக்கு சற்றும் சளைக்காத காளைகளும் தன்னை நெருங்க விடாமல் திமிறி எழுந்தது. இவ்வாறாக போட்டி விறுவிறுப்புடன் நடந்தது. மாலை 6.00 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் முடிவடைந்தன.

மொத்தம் 11 சுற்றுகளாக போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில் அதிக காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்றும், சிறந்த காளைக்கு முதல் பரிசாக டிராக்டர் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. போட்டி தொடங்கியதில் இருந்தே மாடுபிடி வீரர் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கார்த்தி கெத்து காட்டினார்.
போட்டி முடிவில் மொத்தம் 19 காளைகளை அடக்கி கார்த்தி முதலிடம் பிடித்தார். இதனை தொடர்ந்து போட்டி முடிந்ததும் கார்த்திக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் இரண்டாம் இடத்தை அரவிந்த் திவாகர் பிடித்தார். இவர் 15 காளைகளை அடக்கினார். 13 காளைகளை அடக்கி முரளிதரன் என்பவர் 3வது இடமும் பெற்றார்.












Click it and Unblock the Notifications