Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை காவலர்களுக்கு.. சான்பிரான்சிஸ்கோவிலிருந்து நீண்டு வந்த உதவிக் கரங்கள்.. அருமை!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையைச் சேர்ந்த காவல்துறையினருக்கு கொரோனாவிடமிருந்து பாதுகாக்க சான்பிரான்சிஸ்கோவின் வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் மூலம் சுய பாதுகாப்பு உபகரணகங்கள் (Personal Protective Equipment -PPE ) உதவி வழங்கப்பட்டது.

Recommended Video

    மதுரை காவலர்களுக்கு சான்பிரான்சிஸ்கோவிலிருந்து நீண்டு வந்த உதவிக் கரங்கள் - வீடியோ
     Bay area tamil mandram helps Madurai police

    உலகளவில் கொரோனா வைரசுக்கு எதிராக நடக்கும் போரில் முன்னணி பரவல் தடுப்பார்களாக (Front line Fighters) செயல்படும் சுகாதார ஊழியர்கள் மற்றும் காவலர்களின் பங்கு மகத்தானது. காவலர்கள் மக்கள் கூட்டம் ஏற்படாமல் தடுக்க இரவும், பகலும் அயராது களத்திலிருந்து வேலை செய்கிறார்கள்.

     Bay area tamil mandram helps Madurai police

    தமிழகத்தில் பல காவலர்கள் சுய பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) இன்றி எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாகக் கூடிய நிலையில் இருக்கிறார்கள். இவர்களுக்கு பலரும் உதவிகளைச் செய்து கொண்டுள்ளனர். அந்த வகையில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள வளைகுடாப் பகுதி தமிழ் மன்றமும் அருமையான உதவியைச் செய்துள்ளது.

     Bay area tamil mandram helps Madurai police

    மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் அவர்கள் வேண்டுகோளின் அடிப்படையில் , தேசிய வேளாண் நிறுவனத்தின் மூலம், மதுரை மாவட்ட காவல்துறையினருக்கு 430 சுய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து நம்மைக் காக்கும் முன்னணி பரவல் தடுப்பாளர்களை காப்பது நமது கடமை. அதை நிறைவேற்ற உதவிய வளைகுடாப்பகுதி கொடையாளிகளுக்கும் , அந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்த தேசிய வேளாண் நிறுவனத்திற்கும் தமிழ் மன்றம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக அதன் தலைவர் மீனா சுந்தர் நமக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

     Bay area tamil mandram helps Madurai police

    தொடரட்டும் சேவை... கொரோனாவை வென்று விரட்டும் வரை நீளட்டும் உதவிகளும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+