பைக் டாக்சிகளை முறைப்படுத்த 6 மாதத்தில் விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் - அரசுக்கு ஐகோர்ட் கிளை கெடு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழ்நாட்டில் தனியார் செயலிகள் மூலம் இயக்கப்படும் பைக் டாக்சியை முறைப்படுத்த, 6 மாதங்களில் விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் பைக் டாக்சியை முறைப்படுத்த சட்ட விதிமுறைகள் இல்லை. 'அக்ரிகேட்டர்' எனப்படும் தனியார் நிறுவன செயலிகள் மூலமே அவை இயக்கப்படுகின்றன.

bike taxi high court rapido

இந்த நிறுவனங்கள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது. ஆனால், பைக் டாக்சி டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. பயணிகள் பாதுகாப்பு, கட்டண நிர்ணயம், இன்சூரன்ஸ், புகார்களுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பல வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழகத்தில் பைக் டாக்சி சேவையை முறைப்படுத்த விதிமுறைகளை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், 'பைக் டாக்சியை முறைப்படுத்துவது தொடர்பாக தென்மண்டல போக்குவரத்து இணை கமிஷனர் செந்தில்நாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் பைக் டாக்சிக்கு அனுமதி வழங்குவது குறித்து கொள்கை முடிவு எடுக்கப்படும். இதற்கு 6 மாதங்கள் அவகாசம் தேவை' எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, இந்த விவகாரத்தை பொறுத்தவரை ஏற்கனவே இந்த நீதிமன்றத்தில் தெரிவித்தபடி பைக் டாக்சிகளை இயக்குவதற்கான வழிகாட்டுதல் களை ஏற்படுத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழு ஆராய்ந்து அளிக்கும் அறிக்கையை பெற்ற உடன் வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் "பைக் டாக்சிக்கு 6 மாதங்களில் வழிகாட்டுதல்கள், விதிமுறைகளை உருவாக்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+