200 ஆடுகள் பிரியாணிக்கு ரெடியா இருக்கு... வந்து சேருங்க மக்கா! எங்கே தெரியுமா?
மதுரை அருகே கோயில் திருவிழாவில் பிரியாணி பிரசாதமாக வழங்கப்படுகிறது.
மதுரை: 200 ஆடுகள் பிரியாணிக்கு ரெடியா இருக்கு... எங்கே தெரியுமா? கோயில் பிரசாதத்துக்குதான்!!
பொதுவாக ஒரு விசேஷம் என்றால் கிடா வெட்டி விருந்து வைப்பார்கள். ஆனால் கோயில் பிரசாதமாக பிரியாணியை தருவார்களா? என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகாவில் உள்ள கிராமம்தான் வடக்கம்பட்டி. இந்த கிராமத்தில் உள்ள முனிஸ்வரன் கோயிலில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி திருவிழா நடக்கும்.

ஆடுகள், கோழிகள்
அப்போது காலையில் பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக வருவார்கள். பிறகு முனியப்பசாமிக்கு பாலை ஊற்றி அபிஷேகம் செய்வர். அதன்பின்னர் நேர்த்திக் கடனாக ஆடு, கோழிகளை ஊர்வலமாக கொண்டு வந்து கோயிலுக்குள் விடுவார்கள். அந்த ஆடு, கோழிகள் எல்லாம் இரவு நேரத்தில் வெட்டப்பட்டு பிரியாணி தயார் ஆகும்.

மட்டன் பிரியாணி
இந்தக் கோயிலில் மட்டும்தான் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மட்டுமின்றி, திருவிழா அன்று சாலையில் செல்லும் அனைவருக்கும் மட்டன் பிரியாணி பிரசாதமாக தரப்படும். இந்த திருவிழா 3 நாட்கள் நடக்கும்.

பிரசாதம்
எப்போதும் 2 ஆயிரம் கிலோ அரிசி போட்டு, 200 ஆடுகளை வெட்டி பிரியாணி தயார் ஆகும். இந்த பிரியாணி இரவு பகலாக சமைப்பார்கள். விடிகாலை 4 மணிக்கு மணக்க மணக்க முனீஸ்வரனுக்கு பிரியாணியை படைத்துவிட்டு, அதன்பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக தருவார்கள்.

2000 கிலோ அரிசி
காலை நேரத்தில் பிரியாணியை பெரும்பாலும் மக்களுக்கு சாப்பிட்டு பழக்கமில்லை என்றாலும், பிரசாதம் என்பதால் யார் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும், சாப்பிடுவார்கள். பலர் வீட்டிலிருந்து பாத்திரங்களை எடுத்து வந்து பிரியாணியை வாங்கி செல்வார்கள். அதன்படி வருகிற 25-ம் தேதி திருவிழாவுக்காக 2000 கிலோ அரிசியில் 200 ஆடுகளை வெட்டி போட்டு பிரியாணி செய்ய போகிறார்கள்.

முனியாண்டி விலாஸ்
இந்த கோயிலில் பிரியாணியை பிரசாதமாக வழங்க காரணம், முனியாண்டி ஸ்வாமியே ஒரு பிரியர்தானாம். இந்த கிராமத்து முனியாண்டிதான் "மதுரை முனியாண்டி விலாஸ்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டிகளில் பிரபலமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications