மதுரையில் அண்ணாமலைக்கு அடுத்த ஷாக்.. பாஜகவில் விழுந்த புது விக்கெட்.. பின்னணியில் சரவணன்!
மதுரை: மதுரையில் டாக்டர் சரவணனை தொடர்ந்து பாஜக பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா திமுகவில் இணையும் முடிவை எடுத்திருக்கிறார்.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் மதுரை வருகையை ஒட்டி அது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக அண்ணாமலை மதுரை வருகை தந்துள்ளார்.
அண்ணாமலை மதுரை வந்த நேரம் பார்த்து கட்சிக்கே கல்தா கொடுத்துவிடும் முடிவை எடுத்துள்ள எம்.எஸ்.ஷா, சென்னைக்கு விமானத்தில் பறந்துவிட்டார்.
இதனிடையே மதுரையில் பொருளாதார பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை ரத்து செய்த அண்ணாமலை கடும் அப்செட்டில் இருக்கிறார்.
பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு தூண்டில் போட்டு அவர்களை திமுகவுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகளில் டாக்டர் சரவணன் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நட்டா வருகை
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக இரண்டு நாள் பயணமாக மதுரை வருகிறார். அவரை வரவேற்கவும் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை திட்டமிடவும் முன்கூட்டியே மதுரை வந்துள்ள அண்ணாமலை கட்சியின் அனைத்து அணிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் பாஜக பொருளாதார பிரிவு மாநில நிர்வாகிகள் கூட்டம் அந்தபிரிவின் மாநிலத் தலைவர் எம்.எஸ்.ஷா தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு மதுரையில் நடைபெறுவதாக இருந்தது.

அண்ணாமலை ஷாக்
இந்நிலையில் அண்ணாமலைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் விதமாக சென்னைக்கு விமானம் ஏறி பறந்த எம்.எஸ்.ஷா, மொத்தமாக பாஜகவுக்கே முழுக்கு போடும் முடிவுக்கு வந்திருக்கிறார். சென்னையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை டாக்டர் சரவணனோடு சென்று சந்தித்த எம்.எஸ்.ஷா, விரைவில் முறைப்படி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணைய இருக்கிறார்.

பாஜகவினருக்கு தூது
பாஜக மாநில நிர்வாகியை தொடர்ந்து மாவட்ட துணைத் தலைவர் மனோகரன் என்பவரையும் தனது முகாமிற்கு அழைத்து வந்துள்ள டாக்டர் சரவணன், இன்னும் பல முக்கிய பாஜக நிர்வாகிகளுக்கு தூது விட்டு வருகிறார். பலரும் டாக்டர் சரவணனுக்கு பாசிட்டிவ் பதிலளித்து வருவதோடு திமுகவில் இணையவும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனை பாஜக தரப்பு சற்று அதிர்ச்சியோடு பார்க்கிறது.

நட்டா வரும் நேரம்
பாஜக தேசியத் தலைவர் நட்டா தமிழகம் வரும் தருணத்தில் அக்கட்சியின் பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா எடுத்துள்ள முடிவால் அண்ணாமலை கடும் அப்செட் ஆகியிருக்கிறார். மேலும், இன்று மாலை மதுரையில் நடைபெறுவதாக இருந்த பாஜக பொருளாதார பிரிவு மாநில நிர்வாகிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார்











Click it and Unblock the Notifications