மதுரை மீனாட்சி அம்மனுக்கு சேதமடைந்த நகைகளை அணிவிப்பதா? இந்துசமய அறநிலையத்துறைக்கு பாஜக கேள்வி!
மதுரை: மதுரை மீனாட்சி அம்மனுக்கு சேதமடைந்த நகைகளை அணிவிப்பதா என இந்துசமய அறநிலையத்துறைக்கு பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
மீனாட்சி அம்மனுக்கு அணியப்பட்டுள்ள நகைகளில் பவளங்களையும், முத்துக்களையும் படத்தில் காணாதது பக்கதர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக பகீர் கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் டாக்டர்.சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கொரோனா பரவல்
கொரோனா பரவல் காரணத்திற்காக 2 வருடமாக கோவில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்பட்ட மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று முன் தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் 12ஆம் தேதியும் 14ஆம் தேதி திருக்கல்யாணமும், 15ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.

சேதமடைந்த நகைகள்
நகைகளில் பவளங்களையும், முத்துக்களையும் படத்தில் காணாதது பக்கதர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மனுக்கு அணியப்பட்டுள்ள நகைகள் சேதமடைந்துள்ளதை கோவில் நிர்வாகமும், இந்து அறநிலையத்துறையும் கவனிக்கவில்லையா என்ற சந்தேகம் எழுகிறது.

அதிக கட்டணம் வசூல்
மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல விதிக்கப்படுள்ள தடையை மறுபரிசீலனை செய்து, தேவைப்பட்டால் செல்போன் கேமராவை மறைக்கும் ஸ்டிக்கர்களை பொதுமக்களுக்கு வழங்கலாம். பிற மாநில பக்தர்களும், வெளிநாட்டினரும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவது குறைந்துள்ளது.

திராவிட மாடலா?
காரணம் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை உள்ளதால், ஒருவேளை அவர்களின் குடும்பத்தினரை கோவில் வளாகத்தில் பிரிந்துவிட்டால் தொடர்பு கொள்ள முடியாது என்ற பயத்தினால் கோவில் உள்ளே செல்ல யோசிக்கின்றனர். எனவே, அதற்கு தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். கோவிலுக்கு பக்தர்கள் வழங்கும் காணிக்கையை தங்கக்கட்டிகளாக மாற்றிய தி.மு.க அரசு அதனை அம்மனுக்கு பயன்படுத்தாமல் இருப்பதுதான் திராவிட மாடலா? இவ்வாறு மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் டாக்டர்.சரவணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications