இதை நோட் பண்ணீங்களா? நடுவில் இளையராஜாவை நிற்க வைத்து.. மதுரையில் வேலையை தொடங்கிய பாஜக.. பரபரப்பு
மதுரை: இசையமைப்பாளர் இளையராஜாவை வைத்து பாஜகவினர் பல்வேறு விதமான அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட தொடங்கி உள்ளனர். மதுரையில் இளையராஜாவை வைத்து பாஜக ஏற்கனவே போஸ்டர்களை ஒட்ட தொடங்கிவிட்டது .
Recommended Video
சமீபத்தில் பிரதமர் மோடியை இளையராஜா பாராட்டி பேசி இருந்தார். ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் மூலம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார்.
அதில், மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என்று பாராட்டி இருந்தார். அதோடு மோடி பற்றி பேசிய கருத்துக்களை வாபஸ் வாங்க மாட்டேன் என்று இளையராஜா குறிப்பிட்டு இருந்தார்.

பதவி
இந்த நிலையில்தான் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு ராஜ்ய சபா எம்பி பதவி கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக டெல்லி தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. குடியரசுத் தலைவர் 12 பேரை ராஜ்ய சபாவிற்கு எம்பிக்களாக நியமிக்க முடியும். இதில் இந்த முறை இளையராஜா இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வந்தது. அதே சமயம் இவருக்கு முக்கிய சில விருதுகள் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

என்ன நடந்தது
இளையராஜாவை பாஜக தனது ஆதரவாக பயன்படுத்திக்கொள்ளும் என்று முன்பே பல்வேறு அரசியல் வல்லுனர்கள் தெரிவித்து இருந்தனர். வெகுஜன மக்கள் இடையில் மிக மிக பிரபலமாக உள்ளவர் இளையராஜா. கிராமங்களிலும் சரி, நகரங்களிலும் சரி இளையராஜாவிற்கு என்று தனித்துவமான ஆதரவு உள்ளது. இளையராஜா மூலம் பாஜகவை வெகுஜன மக்கள் இடையே கொண்டு செல்ல அக்கட்சி முயற்சிக்கும் என்று ஏற்கனவே பல்வேறு விவாதங்கள் செய்யப்பட்டன.

பாஜக பிளான்
தமிழக பாஜக கடந்த சில மாதங்களாகவே திரைத்துறையினரை அதிக அளவில் கட்சியில் எடுத்து வருகிறது. இயக்குனர் பேரரசு, நடிகை நமீதா, கங்கை அமரன் உள்ளிட்ட திரைத்துறையினரை வைத்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைய முயன்று வருகிறது. அதேபோல் குஷ்பு போன்ற பிரபலமான நடிகைகளுக்கும் பாஜகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இளையராஜாவையும் பாஜக பயன்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக பாஜக கடந்த சில மாதங்களாகவே திரைத்துறையினரை அதிக அளவில் கட்சியில் எடுத்து வருகிறது. இயக்குனர் பேரரசு, நடிகை நமீதா, கங்கை அமரன் உள்ளிட்ட திரைத்துறையினரை வைத்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைய முயன்று வருகிறது. அதேபோல் குஷ்பு போன்ற பிரபலமான நடிகைகளுக்கும் பாஜகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இளையராஜாவையும் பாஜக பயன்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை
இந்த நிலையில்தான் மதுரையில் இளையராஜாவிற்கு ஆதரவாக மதுரை மாவட்ட பாஜக பெரிய போஸ்டர் ஒட்டி உள்ளது. அதில், இளையராஜாவை நடுவில் நிற்க வைத்து இரண்டு பக்கமும் பிரதமர் மோடி மற்றும் அம்பேத்கர் இருவரையும் நிற்க வைத்து போஸ்டர் ஒட்டி உள்ளனர். இரண்டு பேரின் கைகளையும் இளையராஜா சேர்த்து வைப்பது போல போட்டோஷாப் செய்து போஸ்டர் வெளியிட்டு உள்ளனர். இந்த நிலையில்தான் மதுரையில் இளையராஜாவிற்கு ஆதரவாக மதுரை மாவட்ட பாஜக பெரிய போஸ்டர் ஒட்டி உள்ளது. அதில், இளையராஜாவை நடுவில் நிற்க வைத்து இரண்டு பக்கமும் பிரதமர் மோடி மற்றும் அம்பேத்கர் இருவரையும் நிற்க வைத்து போஸ்டர் ஒட்டி உள்ளனர். இரண்டு பேரின் கைகளையும் இளையராஜா சேர்த்து வைப்பது போல போட்டோஷாப் செய்து போஸ்டர் வெளியிட்டு உள்ளனர்.

போஸ்டர்
இளையராஜா மூலம் மக்களிடம் பாஜகவை கொண்டு செல்லும் வேலையாக இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறது. அதிலும் இந்த போஸ்டரில் மதம், சாதி, மொழி கடந்த நம்மை இணைப்பது இசை. இளையராஜாவும்தான் என்று வசனம் எழுதப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டர் மதுரையில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு இருக்கிறது. இணையத்திலும் போஸ்டர் வைரலாகி வருகிறது. இளையராஜா மூலம் மக்களிடம் பாஜகவை கொண்டு செல்லும் வேலையாக இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறது. அதிலும் இந்த போஸ்டரில் மதம், சாதி, மொழி கடந்த நம்மை இணைப்பது இசை. இளையராஜாவும்தான் என்று வசனம் எழுதப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டர் மதுரையில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு இருக்கிறது. இணையத்திலும் போஸ்டர் வைரலாகி வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications