"அவர் திரும்ப வரணும்" தேவர் சித்தாந்தங்களை பாஜக முன்னெடுக்கும்.. தேவர் ஜெயந்தி விழாவில் அண்ணாமலை!
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சித்தாந்தங்களை பாஜக முன்னெடுத்து செல்லும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு திமுக, அதிமுக, சசிகலா, அமமுக, பாஜக உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அண்ணாமலை மரியாதை
இந்த நிலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை கூறுகையில், தமிழ்நாட்டின் முக்கியமான காலகட்டத்தில் மக்கள் பிரதிநிதியாக இருந்து முத்துராமலிங்கத் தேவர் பல்வேறு கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார்.

தேவரின் தேவை
தற்போது தமிழக மண்ணிற்கு மீண்டும் முத்துராமலிங்கத் தேவரின் தேவை எழுந்துள்ளது. ஒருபக்கம் ஆட்சியாளர்களின் கைப்பாவையாக அதிகாரிகள் மாறி வருகின்றனர். அதிகாரத்தில் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம், எதை வேண்டுமானாலும் மறைக்கலாம், மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று நிலை ஏற்பட்டுள்ளது.

பாஜக செயல்படுத்தும்
அதனால் தமிழ்நாட்டிற்கு மீண்டும் முத்துராமலிங்கத் தேவர் தேவைப்படுகிறார். முத்துராமலிங்கத் தேவரின் எண்ணங்கள், கருத்துக்கள், சித்தாத்தங்கள், தமிழ் மண் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ, அதனை பாஜக செயல்படுத்தும் என்று தெரிவித்தார். மதுரை கோரிப்பாளையத்தில் மரியாதை செலுத்திய அண்ணாமலை, அங்கிருந்து நேராக பசும்பொன் சென்று மரியாதை செலுத்த உள்ளார்.

அண்ணாமலை ட்வீட்
முன்னதாக தேவர் ஜெயந்தி விழா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், தெய்வத் திருமகனார் தேசத்தை நேசித்தார். தெய்வீகத்தை வளர்த்தார். ஆன்மீகத்தில் ஆழமான பற்றுக் கொண்டார். வீரத்தின் விளை நிலமானார். இல்லார்க்கு ஏழைப்பங்காளர். தேசியத்தையும் தெய்வீகத்தையும் கண்ணாக காத்த தெய்வத்திருமகனார் பசும்பொன் தேவர் அய்யாவை வான்புகழ வணங்கி ஆசி பெறுவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை கிரீன் சிக்னல் கொடுப்பாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை












Click it and Unblock the Notifications