போடிநாயக்கனூர் டூ மதுரை டூ சென்னை சென்ட்ரல்.. ஆஹா.. இன்று முதல் ஓடத்தொடங்குகிறது ரயில்.. பூரித்த தேனி
மதுரை: அனைத்துக்கட்ட பரிசோதனைகளும் நிறைவடைந்த நிலையில், இன்றுமுதல் போடிக்கு ரெயில் சேவை தொடங்குகிறது... 12 வருடங்களுக்கு பிறகு இப்படியொரு சேவை கிடைக்கபோவதால், தேனி மாவட்டமே பூரித்து போயுள்ளது.
மதுரை - போடி வழித்தடத்தை அகல ரயில்பாதையாக மாற்றுவதற்காக, கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பருடன் மீட்டர்கேஜ் ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது..

இதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், கடந்த வருடம் மே 27-ம் தேதி முதல் மதுரையில் இருந்து தேனி வரை தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது...
சோதனை: இந்நிலையில், போடி வரை இந்த ரயில் நீட்டிக்கப்பட உள்ளது.. இதற்காக ஓஎம்எஸ் எனப்படும் சிறப்பு ஆய்வு ரயில் மூலம் நேற்று சோதனை நடந்தது.. தண்டவாளங்களின் அதிர்வு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன.. பின்னர், இது தொடர்பான அனைத்துக்கட்ட பரிசோதனைகளும் நிறைவடைந்த நிலையில், இன்று முதல் போடிக்கு ரயில் சேவை தொடங்குகிறது.
அதன்படி, மதுரையில் இருந்து தினசரி ரெயில்(06701) காலை 8.20-க்கு புறப்பட்டு 10.30 மணிக்குப்போடியை வந்தடைகிறது. மறுபடியும் 5.50-க்கு புறப்படும் இந்த ரெயில் (06702), இரவு 7.50 மணிக்கு மதுரையைச் சென்றடைகிறது. இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் போடிக்கு ரெயில் (20601) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.35 மணிக்கு போடியை வந்தடைகிறது.
சென்ட்ரல்: மறுமார்க்கமாக போடியில் இருந்து செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை சென்ட்ரலுக்கு ரெயில் (20602) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரவு 8.30 மணிக்குப்புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னையை சென்றடைகிறது.
இன்று தொடக்கம்: இந்த சேவை குறித்து ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, "இந்த ரெயிலில் 2 முன்பதிவில்லா பெட்டிகள், படுக்கை வசதி, முன்பதிவு பெட்டிகள் 4, 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிகள் 2, முதல்வகுப்பு குளிர்சாதன பெட்டி 1 என 14 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை ரெயில் எண் (20602) இன்று இரவு 8.30 மணிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைக்கிறார்.
முதல் ஸ்லீப்பர் கோச்சுக்கு ரூ.390, 3-ம் வகுப்பு ஏ.சி பெட்டிக்கு ரூ.1025, 2-ம் வகுப்பு ஏசிக்கு ரூ.1445, முதல் வகுப்பு ஏசி பெட்டிக்கு ரூ.2415 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நெகிழ்ச்சி: தேனி மாவட்டத்திற்கு கடந்த பல ஆண்டுகளாக ரெயில் போக்குவரத்து தொடங்கப்படாத நிலையில் இப்போது போடியில் இருந்து சென்னை வரை ரெயில்சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்' என்று பெருத்த மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications