Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்கும் செங்கல் தேவைப்படும்".. மதுரையில் உதயநிதி ஸ்டாலின்

வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்கும் செங்கல் தேவைப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. அப்போதும் கூட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை என்றால் மதுரையில் வசிக்கும் மக்கள் எல்லோரும் கையில் செங்கலை எடுத்து போராடுவார்கள் என்று மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

மதுரை பாண்டிக்கோவில் ரிங்ரோடு அருகே உள்ள கலைஞர் திடலில், தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனம் சார்பில், 'மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா' நடந்தது.

இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அனைத்து மகளிருக்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் கடன் உதவிகளை வழங்கினார். முன்னதாக விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

3 முறை மதுரைக்கு வந்திருக்கிறேன்

3 முறை மதுரைக்கு வந்திருக்கிறேன்

அரசு விழாவா? அல்லது மாநாடா? என்று யோசிக்கும் விதத்தில் இந்நிகழ்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் நான் அரசு, கட்சி என பல நிகழ்ச்சிகளில் கலந்துருக்கிறேன். ஆனால் இதுபோல் ஒரு நிகழ்ச்சியில் இதற்கு முன் நான் கலந்துகொண்டதே இல்லை. ஒரே விழாவில் இவ்வளவு தாய்மார்கள் பங்கேற்றத்தை நான் பார்த்தது இல்லை. அமைச்சர் மூர்த்தி தான் காரணம். கடந்த ஒரு மாத்தில் 3 முறை நான் மதுரைக்கு வந்திருக்கிறேன்.

ஜல்லிக்கட்டு நகர்

ஜல்லிக்கட்டு நகர்

இதே கலைஞர் திடலில் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கான உபகரணங்களை வழங்கியிருக்கிறோம். நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே என்னை மதுரைக்கு அழைத்து வந்து கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். இந்த நேரத்தில் அவருக்கு எனது நன்றி மற்றும் பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன். தூங்காநகர், ஜல்லிக்கட்டு நகர் என பெருமை பெற்றது மதுரை.

எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே?

எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே?

ஒரு சிலம்பை வைத்து மன்னனிடம் நீதிகேட்ட கண்ணகி வாழ்ந்த மண் இது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்காக நான் மதுரை வந்திருந்தேன். அப்போது, மாவட்ட செயலாளர் இது தான் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அடிக்கல் நாட்டிய இடம் என்று காட்டினார். அப்போது தான் நான் மதுரையில் இருந்து செங்கலை எடுத்துக்கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே? என தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்தேன். ஆனால் இப்போது வரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணி தொடங்கப்படவில்லை. நடப்பாண்டு பட்ஜெட்டில் கூட மதுரையில் எய்ம்ஸ் கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்படவில்லை.

75% வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்

75% வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்

எனினும் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட கலைஞர் நூலகப் பணிகள் நிறைவடையும் நிலைக்கு வந்துவிட்டது. அவர்கள் வாயில் வடை சுடுவார்கள். ஆனால் தி.மு.க. ஆட்சி சொன்னதை செய்யும். இதுவரை நாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 75 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளோம். இதனை மக்களிடம் நாங்கள் கொண்டுபோய் சேர்க்காததே பிரச்சினை.

 செங்கலை எடுத்து போராடுவாங்க..

செங்கலை எடுத்து போராடுவாங்க..

வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. அப்போதும் கூட எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை என்றால் மதுரையில் வசிக்கும் மக்கள் எல்லோரும் கையில் செங்கலை எடுத்து போராடுவாங்க.. சிலிண்டருக்கு மத்திய அரசு மானியம் தரவில்லை. எல்ஐசியில் போட்ட பணம் காற்றில் போய் விட்டது. இதையெல்லாம் எதிர்க்கட்சிகள் கேட்பதில்லை. அதிமுக தேர்தலின் போது மட்டுமே இங்கே உங்களை சந்திக்க வருவாங்க.. ஆனால் திமுக எப்போதுமே உங்களுடன் தான் இருக்கும். எனவே நீங்களும் இந்த அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

 அடிமை அரசாக அதிமுக

அடிமை அரசாக அதிமுக

தமிழகத்தில் முன்பு கஜானா காலியாக இருந்தது. அடிமை அரசாக அதிமுக இருந்தது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் இந்நிலை அனைத்தும் மாற்றப்பட்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் தான் முதல்வர் ஸ்டாலின் போட முதல் கையெழுத்து. இதேபோல்ல் ஏழை பெண்கள் கல்வியை தொடர புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில், இதுவரைக்கும் 1 லட்சத்து 16 ஆயிரம் பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+