"ஆதீனம் என்றால் ஜால்ரா அடித்து கொண்டு.. பதுங்கி இருக்க முடியாது!" ஆவேசமான மதுரை ஆதீனம்.. என்னாச்சு
மயிலாடுமதுரை: மதுரை பரவை ஆகாஷ் கிளப் மஹாலில் துறவியர் மாநாடு தொடங்கி உள்ள நிலையில், அந்த மாநாட்டில் மதுரை ஆதீனம் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளார்.துறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீன மடத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டு பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு முதலில் தடை விதிக்கப்பட்டது.
இந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து ஆதீனங்களும் இது தொடர்பாக முதல்வரையும் சந்தித்து இருந்தனர்.

மதுரை ஆதீனம்
அதன் பின்னர் தருமபுரம் ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அந்த பின்னர், ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இருப்பினும், இந்த விஷயத்தில் தேவையில்லாமல் தடை விதித்ததாக பக்தர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்தச் சூழலில் ஆதீனம் என்றால் பதுங்கி இருக்கவும் ஜால்ரா அடிக்கவும் முடியாது என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துறவியர் மாநாடு
மதுரை பரவை ஆகாஷ் கிளப் மஹாலில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை சார்பில் இரண்டு நாள் துறவியர் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மதுரை ஆதீனம், பேரூர் ஆதீனம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், "தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்களைத் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் விபூதி பூச மறுக்கின்றனர்.

ஜால்ரா அடிக்க முடியாது
தமிழ்நாட்டில் உள்ள கோயில் சொத்துகளைக் குத்தகை மற்றும் வாடைக்கு விட்டுள்ளனர். இருப்பினும், இதற்கான வாடகை தொகை முறையாக வருவதில்லை. இது குறித்து எதாவது கேள்வி கேட்டால் ஏதோ பிரச்சினை செய்கிறோம் என்ற ரீதியில் பேச ஆரம்பிக்கிறார்கள். ஆதீனம் என்றால் பதுங்கி கிடக்க முடியாது. ஜால்ராவும் அடிக்க முடியாது. இந்துக்கள் இடையே ஒற்றுமை இருக்க வேண்டும். இது குறித்துத் தான் நான் பிரதமர் மோடியிடம் பேசினேன்" என்று தெரிவித்தார்.

ஜால்ரா அடிக்க முடியாது
தமிழ்நாட்டில் உள்ள கோயில் சொத்துகளைக் குத்தகை மற்றும் வாடைக்கு விட்டுள்ளனர். இருப்பினும், இதற்கான வாடகை தொகை முறையாக வருவதில்லை. இது குறித்து எதாவது கேள்வி கேட்டால் எதோ பிரச்சினை செய்கிறோம் என்ற ரீதியில் பேச ஆரம்பிக்கிறார்கள். ஆதீனம் என்றால் பதுங்கி கிடக்க முடியாது. ஜால்ராவும் அடிக்க முடியாது. இந்துக்கள் இடையே ஒற்றுமை இருக்க வேண்டும். இது குறித்துத் தான் நான் பிரதமர் மோடியிடம் பேசினேன்" என்று தெரிவித்தார்.

மதமாற்றத்தைத் தடுக்க வேண்டும்
அவரை தொடர்ந்து பேரூர் ஆதீனம் மருதாசல அடிகள் இந்தக் கூட்டத்தில் பேசுகையில், "நாட்டில் மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்து வேண்டும். சமுதாய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும், சுற்றுச்சுழலைப் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், மாநிலத்தில் இருக்கும் கோயில்களை உடனடியாக தனித்து இயங்கும் வாரியத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்" என்றார்.

இரண்டு நாட்கள் மாநாடு
இரு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மதமாற்றத்தைத் தடுப்பது, மதம் மாறி சென்றோரைத் தாய் மதத்திற்குத் திரும்புவதை ஊக்குவிப்பது, கிராமங்களில் ஏற்றத்தாழ்வுகளைப் போக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும். அதைத் தொடர்ந்து நாளை மாலை பொதுக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications