ஹெலிகாப்டர் விபத்து: யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து.. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
மதுரை: யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
Recommended Video
மதுரை சூர்யாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிதாஸ் (43). இவர் சமூகவலைதளங்களில் பிரதமர் மோடி, பாஜகவுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டதாக தெரிகிறது. இவர் தமிழக சட்டசபை தேர்தலின் போது பாகிஸ்தானை ஆதரிக்கும் திமுகவை தடை செய்ய வேண்டும் என பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சமூகவலைதளங்களில் பதிவு செய்தார். இந்த நிலையில் குன்னூருக்கு சென்ற இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ, விமான படை அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை மாரிதாஸ் வெளியிட்டதாக தெரிகிறது. இதையடுத்து மதுரை போலீஸார் கடந்த 9ஆம் தேதி அவரை கைது செய்தனர். அவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தேனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. அப்போது மாரிதாஸ் மீது வழக்கு பதிந்தது செல்லாது என கூறிய நீதிபதி யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். போலி இ மெயில் மூலம் யூடியூபில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக 2020-இல் பதியப்பட்ட வழக்கில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications