சீமான் குறித்து அவதூறு! பிஸ்மி உள்ளிட்டோருக்கு சிக்கல்.. 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு

Subscribe to Oneindia Tamil

மதுரை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து அவதூறு பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம், 24 மணி நேரத்திற்குள் வழக்கு பதிவு செய்ய கோரி உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் சீமான் மீது அவதூறு பரப்பியதாக யூடியூபர் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழக முதல்வர் விஜய் குறித்து பேசினால் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது ஆனால் சீமான் மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுப்பதில்லையா என்று, நாளைக்குள் சீமான் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறியிருந்தது.

Case registered against YouTubers Bismi and Tamilan Gokul for making defamatory remarks about Seeman

உயர் நீதிமன்றத்தில் வழக்கு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி யூடியூபர்கள் பிஸ்மி, தமிழன் கோகுல் உள்ளிட்டோர் உண்மைக்கு புறம்பாக அவதூறு பரப்புவதாகவும் அவர்கள் மீது நவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்தாலும் போலீசார் வழக்கு பதிவு செய்வதில்லை என்றும் என நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் ஹைகோர்ட் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

யூடியூபர்கள் பிஸ்மி, தமிழன் கோகுல் உள்ளிட்டோர் சீமானுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி நாம் தமிழர் கட்சியில் தொண்டர்கள் இணைவதை தடுக்கின்ற வகையில், பொது அமைதியை குறைப்பது, ஆபாச பதிவு செய்வது, இரு தரப்புகளுக்கும் பிரச்சினை ஏற்படுத்துதல் போன்று கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். திமுக தலைவர் மு.க ஸ்டாலினிடம் இருந்து சீமான் ரூ.100 கோடி பெற்றதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டையும் கூறி வருகிறார்கள்.

சீமான் தவிர்க்க முடியாத தலைவர்

இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எனவே சீமான் மீது அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கவுரி, "தேர்தலில் வெற்றி தோல்வி என்பது அப்பாற்பட்டது. தமிழக அரசியலில் சீமான் ஒரு தவிர்க்க முடியாத தலைவர்..

5 பிரிவுகளின் கீழ் வழக்கு

திமுகவை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ முதல்வர் விஜய் குறித்து பேசியதும் நடவடிக்கை எடுக்குறீர்கள். ஆனால் இந்த வழக்கில் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.. இது போன்ற விஷயங்களை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது. மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை நீக்கி இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து நாளைக்குள் அதனை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மதுரை மாவட்ட சைபர் கிரைம் ஆய்வாளருக்கு உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தான் நீதிமன்றம் உத்தரவுப் படி யூடியூபர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் மீது பொது அமைதியை குறைப்பது, ஆபாச பதிவு, இரு தரப்பினரிடையே பிரச்சினைகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+