பாட்டிலுக்கு 10 ரூபா..விஜய் பாடும்போது பறந்து வந்த செருப்பு! ‘அவரே’ காரணம் என்கிறார் ஆர்பி உதயகுமார்
மதுரை: கரூர் நெரிசல் சம்பவத்தில் சிபிஐ விசாரணை மூலம் இந்த சதிக்கு யார் காரணம் என்பது தெளிவாக தெரிய வரும். ஏற்கனவே முன்னாள் அமைச்சர் மீது சந்தேக பார்வை உள்ளது எனவும், பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று விஜய் பாடும் போது தான் அவர் மீது செருப்பு விழுந்தது என கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்.
புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் மதுரையின் அட்சயப் பாத்திரம் ட்ரஸ்ட் சார்பில் மதுரை தெப்பக்குளம் முத்தீஸ்வரர் கோவிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அன்னதானம் வழங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆர்.பி. உதயகுமார்," கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை மூலம் இந்த சதிக்கு யார் காரணம் என்பது தெளிவாக வரும். ஏற்கனவே முன்னாள் அமைச்சர் மீது சந்தேக பார்வை உள்ளது.

கரூர் நெரிசல்
பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று விஜய் பாடும் போது தான் அவர் மீது செருப்பு விழுந்தது. அதே போல ஆம்புலன்ஸ் சென்றது. கரூர் சம்பவத்தில் டிஜிபி, ஏடிஜிபி, முதலமைச்சர் ஆகியோரின் அறிக்கை முரண்பாடாக உள்ளது. சிபிஐ விசாரணை செய்தால் உண்மை வெளிச்சத்துக்கு வரும். டி.டி.வி. தினகரன் கருத்தை யாரும் பெரிது படுத்த வேண்டாம். எடப்பாடியார் மைதானத்தில் ஓடி வெற்றிக்கான கோப்பையை பெரும் நிலையில் உள்ளார்.
ஆர்.பி. உதயகுமார்
ஆனால் மைதானத்தில் வேடிக்கை பார்ப்பவர் தான் டிடிவி தினகரன். அவரது பேச்சு வேகாத பேச்சு, வெட்டிப் பேச்சு ஆகும். இன்றைக்கு ஸ்டாலின் கூட்டணி பலத்தில் உள்ளார். 'அவரே கூட்டணி பலம் என்று கூறி வருகிறார். இன்றைக்கு திமுகவை வீழ்த்தும் சக்திகள் எடப்பாடியாரின் பின்னால் அனைவரும் அணி திரண்டு வர வேண்டும். நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும். ஏனென்றால் சரியான நேரத்தில், சரியான முடிவு எடுத்தால் தான் ஜெயிக்க முடியும்.
நடிகர் விஜய்
இல்லையென்றால் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் வேற விதமாக அமைந்து விடும். இதே சிரஞ்சீவி தனிக்கட்சி தொடங்கி சரியாக முடிவெடுக்கவில்லை. ஆனால் பவன் கல்யாண் சரியான முடிவு எடுத்து இன்றைக்கு ஆந்திராவில் துணை முதலமைச்சராக உள்ளார் ஐக்கிய நாட்டு சபையில் கஜித்த வைகோ, கருணாநிதி மீது பழி சுமத்தி தனி கட்சி தொடங்கினார். அப்போது அவர் பின்னால் இளைஞர்கள் வந்தார்கள். அவர் எடுத்த சில தவறான முடிவால் இன்றைக்கு அவரை கட்சியையும் தொண்டர்களையும் காப்பாற்ற முடியாத நிலையில் உள்ளார்.
அதிமுக கூட்டணி
இன்றைக்கு விஜய் நல்ல முடிவை எடுப்பார் என்று மக்களும் ,அவரது தொண்டர்களும் உள்ளார்கள் இன்றைக்கு அவருக்கு நல்ல வாய்ப்பு உள்ளது அதை அவர் நழுவ விடக்கூடாது. 54 ஆண்டுகள் மக்கள் செல்வாக்கு பெற்று 31 ஆண்டுகள் ஆட்சியில் அதிகாரத்தில் உள்ள மக்களுக்கு சேவை செய்யும் அதிமுகவுடன் அவர் பயணம் செய்ய வேண்டும். அதுதான் மக்கள் எண்ணமாக உள்ளது. திமுகவை வீழ்த்த அதிமுகவுடன் சேர வேண்டும் மீண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை மட்டுமல்லாது தவெகவையும் ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது' என கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி












Click it and Unblock the Notifications