எது தீண்டத்தகாத ஜாதி (தீ)?.. சைக்கிள் டெஸ்ட் வினாத்தாளில் நஞ்சை கக்கிய மதுரை சிபிஎஸ்இ பள்ளி
மதுரை: மும்பை மாகாணத்தில் தீண்டத்தகாத ஜாதி எது என மதுரையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் 6-ஆம் வகுப்புக்கான பருவத் தேர்வில் கேள்வி கேட்கப்பட்டது.
மதுரையில் வல்லபா எனும் தனியார் பள்ளி உள்ளது. இங்கு தற்போது மாணவர்களுக்கு பருவத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் 6 ஆம் வகுப்புகளுக்கு நேற்றைய தினம் சமூக அறிவியல் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வில் The community whichd wsa treated as unctouchbles in Bombay Presidency? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு ஆப்ஷன்களாக a) mahar b) nayar, c) koli என கொடுக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்
இந்த கேள்வியை பார்த்த ஒரு பெற்றோர் இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர். பிஞ்சு குழந்தைகளிடம் இப்போது ஜாதிய பாகுபாட்டை திணிக்கும் வகையிலான கேள்விகளை கேட்பதா என பெற்றோர் பள்ளி முதல்வருக்கு மெயில் மூலம் கேட்டுள்ளார்.

பள்ளி நிர்வாகம்
இதற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சலின் புத்தகத்திலிருந்தே இந்த கேள்வி கேட்கப்பட்டது. இனி இது போல் சர்ச்சைக்குரிய கேள்விகள் இடம்பெறாத வகையில் பார்த்துக் கொள்வதாக பள்ளி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

பாட புத்தகம்
என்சிஆர்டி சமூக அறிவியல் புத்தகத்தில் பக்கம் எண் 19 இல் இந்த ஜாதி குறித்த தகவல்கள் உள்ளன. அதாவது Diversity and discrimination என்ற பாடத்தில் இது போன்று வருகிறது. ஏற்கெனவே தென்காசி பாஞ்சாகுளத்தில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டங்கள் விற்பதில்லை என ஜாதி வெறியுடன் கடைக்காரர் கூறியிருந்த வீடியோ வைரலானது.

ஜாதி பாகுபாடு
அது போல் அந்த பள்ளியிலும் ஜாதி பாகுபாடு பார்க்கப்படுவதாக அந்த சமூகத்து மாணவர்களும் பெற்றோர்களும் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விசாரணை நடத்தப்படும் வரும் நிலையில் தற்போது சிபிஎஸ்இ பாடப்பிரிவில் தீண்டத்தகாத ஜாதி குறித்த தகவல்கள் இடம்பெற்றதுடன் அது குறித்த கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications