மத்திய அரசின் திட்டம் தான் என்ன?... தஞ்சையை பாலைவனமாக்குவதா... வைகோ கோபம்
மதுரை: தஞ்சையை பாலைவனமாக்க மத்திய அரசு திட்டமிடுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு உள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை வைகோ சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: மத்தியில் ஆளும் மோடி அரசு நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து கொண்டு சலுகைகளை அறிவித்து வெற்றி பெறலாம் என்று நினைகிறார்கள்.
அடக்கு முறை போன்ற பாசிச செயல் மூலம் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிகிறது என்று தெரிவித்தார்.

பாலைவனமாக்க திட்டம்
மேலும், இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் திட்டம் மேம்படுத்தப்படும் என மத்திய அரசு கூறுவது தஞ்சையை பாலைவன பிரதேசமாக முழுமையாக அழிக்கப்படும் என்ற சூழலை உருவாக்க தான் என்றார்.

மோடி வரவில்லை
கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிடவோ, ஆறுதல் கூறவோ மோடி வரவில்லை. கஜா புயலினால் 89 பேர் இறந்துள்ளனர். இதற்கு இரங்களோ வருத்தமோ தெரிவிக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 ஆயிரம் கோடி நிவாரணம் தேவை அதை வழங்க வில்லை. விவசாயிகளை பிச்சைகார்களாக நினைத்து மாதம் 500 கொடுகிறார்கள். தமிழக மக்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது.

ஓட்டு வாங்க இடஒதுக்கீடு
மேலும் தமிழகத்திற்கான எந்த ரயில்வே திட்டமோ, வளர்ச்சி திட்டமோ செயல்படுத்தவில்லை. 10 % இட ஒதுக்கீடு என்பது வட மாநிலத்தில் சில குறிப்பிட்ட உயர்வகுப்பினர் ஓட்டு வாங்க மோடி அரசு செயல்படுகிறது. மத்திய பா.ஜ.க அரசு தென் மாநிலங்களில் வெற்றி பெற வழியில்லை. ஆனால் கர்நாடகாவில் சில இடங்களில் வர வாய்ப்பு உள்ளது.

மாநில அரசு தான் காரணம்
வட மாநிலத்தில் பா.ஜ.க விற்கு வரவேற்பு இல்லை. காங்கிரஸ் சில மாநில கட்சிகளுடன் ஆட்சி அமைக்கும். அடக்கு முறை போன்ற பாசிச செயல் மூலம் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிகிறது. ஸ்டெர்லைட் ஒரு வேளை திறப்பதற்கான சூழ்நிலை உருவானால் அதற்கு மாநில அரசு தான் காரணம். மத்திய அரசின் கைக்கூலியாக செயல்படுகிறது என்றும் வைகோ கூறினார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications