பாத்ரூமே 6 அடி தான்.. அவரு 5.5 அடி.. மண்டிபோட்டு தொங்க முடியுமா.. செக்கானூரணி வழக்கில் கேள்வி

Subscribe to Oneindia Tamil

மதுரை : மதுரை செக்காணூரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த டிரைவர் பாலகிருஷ்ணன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து வழக்கறிஞர் சில குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். அதன்படி , "பாத்ரூம் மொத்தமே 6 அடி உயரம்.. இவரே 5.5 இருப்பாரு.. அங்க எப்படி இந்த மாதிரி விபரீத முடிவெடுத்து இருப்பார்.. என்று தெரியவில்லை.. எந்த சம்மனும் அவருக்கு கொடுக்கவில்லை. எங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை வேண்டாம், எங்களுக்கு சி.பி.ஐ விசாரணை தான் வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்

தேனி மாவட்டம் தேவாரம் அருகே அழகர் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், மதுரை சேர்ந்த நாகராஜ் என்ற ஏலக்காய் வியாபாரியிடம் ஓட்டுனராக பணியாற்றி வரும் நிலையில், கடந்த 03 ந்தேதி போடியில் இருந்து மதுரைக்கு லாரியில் ஏலக்காய் ஏற்றி வந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் என்ற இடத்தில் லாரி எரிந்து விட்டதாக கூறி புகாரளிப்பதற்காக நேற்றிரவு மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.

Chekkanoorani Case 6-Ft Room 5 5-Ft Man Could He Hang Himself While Kneeling

அவர் அளித்த புகாரில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரை காவல் நிலையத்திலேயே போலீசார் இரவு தங்க வைத்துள்ளனர். காவல் நிலைய ஆய்வாளர் அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தவர், இன்று காலை காவல்நிலைய கழிவறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், தான் அளித்த புகார் மூலம் தானே போலீசாரிடம் சிக்கிக் கொண்டதால் பயத்தில் பாலகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய வெளியே சென்றபோது, அவர் காவல் நிலையக் கழிவறையில் விபரீத முடிவெடுத்து உயிரிழந்தார்.

​இதையடுத்து, மதுரை மாவட்ட எஸ்.பி தேவநாதன் நேரில் விசாரணை நடத்தி வருவதால், செக்கானூரணி காவல் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பால கிருஷ்ணனின் மரணத்தின் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக கூறி பால கிருஷ்ணனின் மனைவி சுதா மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

பாலகிருஷ்ணனின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் பேசுகையில், டிரைவர் பாலகிருஷ்ணன் காவல் நிலையத்தில் இருந்துள்ளார். காவல் நிலையத்தில் அவருக்கு எந்தவிதமான சம்மன் வழங்கப்படவில்லை.. புகார்தாரர்ரை குற்றவாளியாக்க முயற்சி செய்துள்ளார்கள்.. சாதாரண பாத்ரூமில் தூக்கு போட்டதாக சொல்கிறார்கள். அந்த பாத்ரூமின் அளவே மொத்தம் ஆறு அடி தான்.. இவர் ஐந்தரை அடி உயரம் உள்ளவர்.இவர் மண்டிபோட்டு எப்படி தூக்கில் தொங்க முடியும்?

அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது. விழிப்புணர்வாக செயல்படவில்லை.. புகார்தாரர் மேலேயே எப்ஐஆர் போட்டோம் என்றால் எப்படி.. எப்ஐஆர் கூட போடவில்லை.. சிஎஸ்ஆரும் போடவில்லை. ஏன் அதிகாலை 3 மணி வரை காவலில் வைக்கிறீங்க.. ஏன் அதிகாலை வரை எங்களுக்கு எந்த தகவலும் கொடுக்கவில்லை.. நீங்கள் 41 ஏ நோட்டீஸ் கொடுக்காமல் விட்டிருக்கீங்க.. இதனை சந்தேக மரணம் என்று வழக்கு போடப்பார்க்குறீங்க. இதுவந்து முழுக்க முழுக்க கொலை வழக்காக போட வேண்டும். சிபிசிஐடி விசாரணை வேண்டாம். சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். இதற்காக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர போகிறோம்.

உயிரிழந்த டிரைவரின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் போது, 3 பேர் கொண்ட தடயவியல் நிபுணர்களை நியமிக்க வேண்டும். நீதிபதி முன்பாக வீடியோ ரெக்கார்டிங் செய்து தான் போஸ்ட் மார்டம் செய்ய வேண்டும். சிசிடிவி வீடியோ காட்சிகளை காவலர்கள் அழிக்க முயற்சி செய்கிறார்கள்.. சிபிசிஐடி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டிருப்பதற்கு பின்னால், வழக்கை மூடி மறைக்க வேண்டும் என்ற காரணம் தான் உள்ளது. முழுமையாக எந்த ஒரு நடவடிக்கையும் இப்போது வரை எடுக்கவில்லை" என்று குற்றம்சாட்டினார்.

ஆனால் காவல் துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி கூறுகையில், "காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்து வருகிறோம். அவற்றின் மூலம் சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்கள் தெரியவரும். காவல் நிலையத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதால், உரிய நடைமுறைப்படி நீதித்துறை விசாரணை நடத்தப்படும்.

மேலும், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி ஒப்படைக்கப்படும். சம்பவத்தின் போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவம் தொடர்பாக இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+