அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பை வீசலாமா? இதுல வழக்கை ரத்து செய்ய கேட்கறீங்க! நீதிபதி காட்டம்
மதுரை: அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் வாகனத்தில் செருப்பு வீசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பாஜக நிர்வாகிகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்ததற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
மேலும் தேசியக் கொடி பொருத்தப்பட்ட காரில் செருப்பை வீசலாமா என கண்டனமும் தெரிவித்தனர். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதித் துறை அமைச்சராக இருந்த போது இந்த சம்பவம் நடந்தது.

தற்போது அவர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருக்கிறார். பல்வேறு விவாதங்களில் பங்கேற்று பாஜகவினருக்கும் அதிமுகவினருக்கும் டேட்டாவுடன் பதிலடிகளை கொடுத்தவர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றிய மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் பணியில் இருந்த போது வீர மரணம் அடைந்தார். அவரது உடல் விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது மதுரை விமான நிலையத்தில் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது பாஜகவினர் சிலர் அவரது காரை வழிமறித்து போராட்டம் நடத்தினர். இதில் சிலர் தேசியக் கொடி பொருத்தப்பட்ட காரில் செருப்பை வீசி அடித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிடிஆருக்கு எதிராக முழக்கங்களும் எழுப்பப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் சிலரை கைது செய்திருந்தனர். இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது செருப்பை வீசிய விவகாரத்தில் தங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி பாஜகவை சேர்ந்த வேங்கை மாறன், மணிகண்டன், தனலட்சுமி, மாணிக்கம் உள்ளிட்ட 12 பேர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கை ரத்து செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி புகழேந்தி, "ஒரு அமைச்சர் பயணிக்கும் போது அதிலும் அவருடைய வாகனத்தில் தேசியக் கொடி இருந்தது. அந்த வாகனத்தின் மீது செருப்பு வீசுவது என்பது தேசியக் கொடியை அவமதிக்கும் செயலாகும். அது மட்டுமில்லாமல் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் அமைச்சரை திட்டி கோஷம் எழுப்பி உள்ளீர்கள் என நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
மேலும் அரசு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் இந்த வழக்கை எப்படி ரத்து செய்ய முடியும்? என கேட்ட நீதிபதி, இந்த வழக்கை விசாரணை நீதிமன்றத்தில் முறையாக சந்திப்பதே சரியாக இருக்கும் என கருத்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையையும் ஒத்தி வைத்தார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications