எனக்கு மட்டும் 10 ஆண்டு சிறையை ஏற்க முடியாது! ஜாமீன் கோரிய நிர்மலா தேவி! மறுத்த ஹைகோர்ட் மதுரை கிளை
மதுரை: பேராசிரியர் நிர்மலா தேவிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துள்ளது. அது போல் 10 ஆண்டு கால சிறை தண்டனையை நிறுத்தி வைக்கவும் மதுரை கிளை மறுத்துவிட்டது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதற்கான தீர்ப்பை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி வழங்கியது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி காவியன் நகரைச் சேர்ந்தவர் சரவணபாண்டியனின் மனைவி நிர்மலா தேவி (54). நிர்மலா தேவி அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணித உதவி பேராசிரியையாக பணியாற்றினார். இவர் தன்னிடம் படிக்கும் சில மாணவிகளிடம் செல்போனில் பேசி, நான் சொல்லும் பெரிய மனிதர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டால் உங்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என கூறி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறாக வழிநடத்த முயற்சி செய்தார்.
இதை மாணவி ஒருவர் சமூகவலைதளங்களில் வெளியிட்ட நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு புகார் எழுந்தது. பேராசிரியை நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்தனர். அதன் பேரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து நிர்மலாதேவி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி அருப்புக்கோட்டை போலீஸ் நிலையத்தில் கல்லூரி செயலாளர் ராமசாமி புகார் அளித்தார்.
மேலும் நிர்மலாதேவி மீது மாணவிகள் 5 பேரும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து நிர்மலாதேவியை கைது செய்தனர். மாணவிகளிடம் பாலியல் பேரம் வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவராக இருந்த கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. ஜாமீனில் வெளியே வந்த நிர்மலாதேவி உள்பட 3 பேரும் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் ரகசிய வாக்குமூலங்கள் பெறப்பட்டன. அனைத்து விசாரணையும் முடிந்த நிலையில், இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி பகவதி அம்மாள் அறிவித்து இருந்தார்.
அதன்படி அன்றைய தினம் முருகன், கருப்பசாமி ஆஜரானார்கள். ஆனால் நிர்மலா தேவி ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து தீர்ப்பை நேற்றைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிபதி ஒத்திவைத்து இருந்தார். ஏப்ரல் 30ஆம் தேதி காலை 10 மணிக்கு முருகன், கருப்பசாமி, நீதிமன்றத்தில் ஆஜராகினர். தொடர்ந்து நிர்மலாதேவி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். மதியம் 1 மணி அளவில் நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பை வாசித்தார். அப்போது காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய 2 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
இதைத் தொடர்ந்து நிர்மலா தேவிக்கு தண்டனை விவரங்கள் அடுத்த நாள் வழங்கப்பட்டன. அதில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் ரூ 2.45 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து பேராசிரியர் நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் தனக்கு விதித்த 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும். வழக்கு முடியும் வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவேன்.
இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி 2ஆவது, 3 ஆவது குற்றவாளிகளான முருகன், கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் இருவருக்காகதான் நான் மாணவிகளிடம் செல்போனில் பேசினேன்.
குற்றவாளிகளை விடுதலை செய்துவிட்டு என்னை பல பிரிவுகளில் தண்டித்து 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது ஏற்புடையதல்ல. எனவே இந்த வழக்கில் எனக்கு விதித்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதி ராமகிருஷ்ணன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தற்போதைய நிலையில் இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications