கார்த்திக்குமார் மீது சரமாரி தாக்குதல்! துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு எதிரான வழக்கு! இன்று விசாரணை!

Subscribe to Oneindia Tamil

மதுரை: துறையூர் தொகுதியில் குடிநீர் பிரச்சினை காரணமாக புகார் அளிக்க சென்ற போது, துணை சபாநாயகர் ரவிசங்கர், தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமூகஆர்வலர் கார்த்திக்குமார் தொடர்ந்த வழக்கு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் கார்த்திக்குமார் (45). இவர் ஒரு சமூகஆர்வலர். இவரது தொகுதியில் குடிநீர் பிரச்சினை இருந்து வரும் நிலையில் அது குறித்து நகராட்சி நிர்வாகம், துறையூர் எம்எல்ஏ ரவிசங்கர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் புகார் அளித்திருந்தார்.

Chennai highcourt ravishankar

ஆனால் அந்த புகார் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையின்போதும் இதே போல் குடிநீர் இல்லாமல் அந்த தொகுதி மக்கள் அவதிப்பட்டனர். இதையடுத்து மணச்சநல்லூர் சென்ற போது அங்கு துணை சபாநாயகரும் தொகுதி எம்எல்ஏவுமான ரவிசங்கரின் கார் அவரது வீட்டருகே இருந்ததை கார்த்திக்குமார் கவனித்துள்ளார்.

இதனால் அவரது வீட்டிற்கு சென்று எம்எல்ஏவிடம் நேரிடையாக குறையை சொல்ல சென்றாராம். அப்போது ரவிசங்கர், அவரிடம் என்ன ஏது என்று கூட கேட்காமல் கெட்ட வார்த்தைகளில் திட்டி, கார்த்திக்கை கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.

இது குறித்த வீடியோ வைரலானது. தொகுதி பிரச்சினை புகார் குறித்து புகாரளிக்க சென்றால் இப்படியா செய்வது என பலர் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் காயமடைந்த கார்த்திக், மணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் இருந்தபடியே தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு எம்எல்ஏவும் அவரது குடும்பத்தினரும்தான் காரணம் என குற்றம்சாட்டியிருந்தார்.

திடீரென சிறிது நேரத்திற்கெல்லாம் ரவிசங்கர் வீட்டில் அவருடந் அமர்ந்து கொண்டு , ரவிசங்கர் தன்னை தாக்கவில்லை, கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவ்வளவுதான், இதை பெரிதுப்படுத்தாதீர்கள் என்றார். உயிருக்கு ஆபத்து என கூறிய சிறிது நேரத்தில் சமாதானமாகிவிட்டாரே என பலரும் விமர்சித்திருந்தனர்.

இந்த நிலையில் கார்த்திக் குமார் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் அவர், மணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் தன்னை மிரட்டி அவ்வாறு சொல்ல வைத்தார். இன்ஸ்பெக்டரும், துணை சபாநாயகரும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். தாங்கள் சொல்லி கொடுப்பதை சொல்லவிட்டால், வெளியே செல்ல முடியாது என மிரட்டியதால் உயிருக்கு பயந்து அவ்வாறு மாற்று பேசியதாகவும், ரவிசங்கர் தன்னை அடித்தது உண்மை என கார்த்திக்குமார் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கார்த்திக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் விசாரணை அதிகாரி இல்லாததால் விசாரணை தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கார்த்திக்குமாரின் வழக்கறிஞர் பொன் முருகேசன் கூறுகையில், "எனது கட்சிக்காரரை போலீஸார் வேண்டும் என்றே அலைக்கழிக்கிறார்கள். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள்படி இது போன்ற புகார்களில் எஃப்ஐஆர் பதிவு செய்து விட்டுதான் விசாரணை நடத்த சம்மன் அனுப்ப வேண்டும். ஆனால் போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்யவில்லை.

எனவே துணை சபாநாயகர் மீதும், மணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் மீதும் எஃப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கோரி மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை சட்ட போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+