மதுரைக்கு போனால் அண்ணனை பார்க்காமல் எப்படி? அழகிரியின் வீட்டிற்கே போன முதல்வர் ஸ்டாலின்!
மதுரை: முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு மு.க அழகிரியை சந்தித்து பேசினார். மதுரையில் தனது அண்ணன் மு.க அழகிரியை அவரது இல்லத்துக்கு நேரில் சென்று ஸ்டாலின் சந்தித்து பேசினார். முன்னதாக ஸ்டாலினை வரவேற்ற மு.க அழகிரியின் நிர்வாகிகள் ஸ்டாலினுக்கு செங்கோல் பரிசாக அளித்தனர். இந்த சந்திப்பின் போது முதல்வர் ஸ்டாலின் கட்சியினர், அமைச்சர்கள் யாரையும் அழைத்து செல்லவில்லை. அவர் மட்டுமே அழகிரியின் வீட்டுக்கு சென்றார். அழகிரி வீட்டில் இரவு விருந்து சாப்பிட்டுள்ளார். நாளை திமுக பொதுக்குழு நடக்க இருக்கும் நிலையில் இன்று மு.க அழகிரியை சந்தித்து பேசினார்.
மதுரை வந்த முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு 10 மணியளவில் அண்ணன் மு.க அழகிரியின் வீட்டுக்கு சென்றார். கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் யாரையும் தன்னுடன் அழக்காமல் ஸ்டாலின் மட்டுமே சென்றார். காரில் இருந்து இறங்கிய ஸ்டாலினுக்கு அழகிரியின் நிர்வாகிகள் செங்கோல் கொடுத்தனர். தொடர்ந்து ஸ்டாலினை வரவேற்று அழைத்து சென்றார்.

மதுரையில் நாளை திமுக பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதற்காக மதுரைக்கு இன்று மாலை ஸ்டாலின் வருகை தந்தார். தொடர்ந்து மதுரையில் 25 கிமீ தூரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பிரமாண்ட ரோடு ஷோ நடத்தினார். ஏராளமான திமுகவினர் மற்றும் பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று ஸ்டாலினை பூக்கள் தூவி உற்சாகத்துடன் வரவேற்றனர்.
சில இடங்களில் ஸ்டாலின் இறங்கி சாலையில் நடந்து சென்று மக்களிடன் மனுக்களையும் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து மதுரை மெஜிரா கோட்ஸ் ஆலை முன் முன்னாள் மேயர் முத்துவின் சிலையை ஸ்டாலின் திறந்து வைத்தார். அவரது வெண்கல சிலையை திறந்து வைத்த ஸ்டாலின் பின்னர், அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
இதன் பின்னர் ஆட்சி அமைத்ததற்கு பிறகு முதல் முறையாக அண்ணன் மு.க அழகிரியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அவரது வீட்டுக்கே சென்ற முதல்வர் ஸ்டாலின், மு.க அழகிரியை சந்தித்து பேசினார். 11 ஆண்டுகளுக்கு பிறகு மு.க அழகிரியை முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு சென்று சந்தித்துள்ளார்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பாக, துரை தயாநிதியின் உடல் நிலை பிரச்சினையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, முதல்வர் ஸ்டாலின் அவரது உடல்நலன் குறித்து நலம் விசாரித்தார். அப்போது அண்ணன் மு.க அழகிரியை அவர் சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications