30% வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்குவதே டார்கெட்! மதுரை பொதுக்குழுவில் ஸ்டாலின் போட்ட ஆர்டர்!
மதுரை: 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுக்க வேண்டும். புதிய உறுப்பினர் சேர்க்கை பணிகளை தொகுதி பார்வையாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கண்காணிக்க வேண்டும் என திமுக பொதுக்குழுவில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், 6,500 பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் பொதுக்குழுவில் 27 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான சிறப்புத் தீர்மானத்தை திமுக தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்தார்.
நமது மண், மொழி, மானம் காத்திடவும் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடும் பொருட்டு "ஓரணியில் தமிழ்நாடு" என்னும் புதிய உறுப்பினர் சேர்க்கையை கழகம் முன்னெடுக்க வேண்டும் என பொதுக்குழுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார்.
30% வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்க இலக்கு நிர்ணயிக்க வேண்டும்; ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30% வாக்காளர்களை திமுக உறுப்பினர்கள் ஆக்க வேண்டும். பாக முகவர் முதல் நிர்வாகிகள் வரை முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிறப்பு தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "எல்லாருக்கும் எல்லாம்' எனும் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது ஏதேனும் ஒரு திட்டத்தில் பயனாளியாக உள்ளனர். இத்தகைய நலத்திட்டங்களும், மாநிலத்தின் வளர்ச்சியும், தொடர்ந்திடவும், மாநில உரிமைக்கான போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுக்கவும், நமது மண், மொழி, மானம் காத்திடவும் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைத்து, வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
துளியும் சமரசமின்றி நெஞ்சுரத்தோடு தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடும் பொருட்டு "ஓரணியில் தமிழ்நாடு" என உறுப்பினர் சேர்க்கையை கழகம் முன்னெடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது. திமுக சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டிகள் மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை திமுகவின் உறுப்பினராக இணைத்திட இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
வீடு வீடாகச் சென்று அரசின் திட்டங்களையும், உரிமைப் போராட்டங்களையும் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டின் வாக்காளர்களை 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற முன்னெடுப்பில் இணைப்பதற்கான செயல்களை மேற்கொண்டு, அடுத்து வரும் இரண்டு மாதங்களில் மாவட்ட - பகுதி - நகர ஒன்றிய பேரூர் - வட்ட - கிளை கழகச் செயலாளர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை நிறைவு செய்திட வேண்டும்.
அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் தொடங்கி, பாக முகவர்கள் வரை கழகத்தின் அனைத்து உடன்பிறப்புகளும் இதில் முழுமூச்சாக உழைத்திட வேண்டும். புதிய உறுப்பினர் சேர்க்கைப் பணியை தொகுதி பார்வையாளர்களும், மாவட்டச் செயலாளர்களும் முழுமையாகக் கண்காணித்து வெற்றிகரமாக்கிட வேண்டும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது." எனத் தெரிவித்தார்.
மேலும், தி.மு.க பொதுக்குழுவில் மொத்தம் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி செம்மொழி நாளாக கொண்டாடப்படும். முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தி.மு.கவில் மாற்றுத்திறனாளிகள் அணி புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளது. அதோடு, ஆசிரியர்கள், பேராசிரியர்களை கொண்ட கல்வியாளர்கள் அணி உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 23 அணிகள் உள்ள நிலையில், புதிதாக இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
-
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications