தாய்மாமன் தங்க மோதிர திட்டம்.. நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாதுகாப்பு வளையத்தில் மதுரை!

Subscribe to Oneindia Tamil

மதுரை: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" மூலம் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதல்வர் விஜய் இத்திடத்தை தொடங்கி வைக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

2026 தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் ஆட்சிக்கு வருவதற்கு தேர்தல் வாக்குறுதிகள் மிக முக்கிய காரணமாக இருந்தது. குறிப்பாக தாலிக்கு தங்கம் வழங்கும் அண்ணன் சீர் திட்டம், அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், இலவச பேருந்து பயணத் திட்ட விரிவாக்கம் என பல திட்டங்கள் இடம் பெற்றிருந்தது.

CM Vijay Launches Thaimaman Gold Ring Scheme

தற்போது ஆட்சியைப் பிடித்திருக்கும் நிலையில் ஒவ்வொரு திட்டமாக நிறைவேற்றி வருகிறது விஜய் அரசு. அந்த வகையில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

தாய்மாமன் தங்க மோதிரம்

மொத்தமாக சுமார் 4,40,000 தங்க மோதிரங்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஏற்கனவே இந்த திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் வழங்கப்பட்ட நிலையில் ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த டென்டரை கைப்பற்றின. சுமார் 70% மோதிரங்களை ஜோய் ஆலுக்காஸ் நிறுவனமும், கல்யாண் ஜுவல்லர்ஸ் 30 சதவீதம் மோதிரங்களை தயாரிக்கும் ஆணையை பெற்றன.

ஜோஸ் ஆலுக்காஸ்

இந்த நிலையில் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு முதல் கட்ட வழங்கப்பட்ட முதல் கட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 89 ஆயிரம் தங்க மோதிரங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு இருக்கிறது. 22 கேரட் - ஒரு கிராம் எடையுடன் தயாரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மோதிரத்திலும் பிஐஎஸ் ஹால்மார்க் மற்றும் எச்யுஐடி எண்ணும் இடம் பெற்று இருக்கிறது.

முதல்வர் விஜய்

தற்போது அதிக அளவில் பிரசவங்கள் நடக்கும் 117 அரசு தாய் சேய் நல மையங்களுக்கு 89 ஆயிரத்து 955 மோதிரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார். இதை அடுத்து இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ராஜாஜி அரசு தலைமை மருத்துமனை

நாளை காலை சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வரும் விஜய்க்கு ரசிகர்களும், பொதுமக்களும், தமிழக வெற்றிக் கழகத்தினரும் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை சென்னை ராஜாஜி அரசு தலைமை மருத்துமனையில் துவங்கி வைக்கும் அவர், மதுரையில் புதுப்பிக்கப்பட்ட காந்தி மியூசியம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கிறார். இதை அடுத்து இதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

பலத்த பாதுகாப்பு

முதல்வர் விஜயின் வருகையை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல்,தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் மதுரையின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முதல்வர் வருகையை முன்னிட்டு மதுரையில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+