கடைசில இப்படி ஆகிப் போச்சே! ”தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” சிஎம் விஜய் ப்ளானில் திடீர் மாற்றம்?

Subscribe to Oneindia Tamil

மதுரை: "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்". அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தை வரும் 28ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய். இந்த நிலையில் அந்தத் திட்டத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது உசிலம்பட்டி மருத்துவமனையில் முதல்வர் விஜய் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், இடப்பற்றாக்குறை காரணமாக நிகழ்வு நடைபெறும் இடம் மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தேர்தலுக்கு முன்பு பிரச்சாரம் மேற்கொண்ட போது மகளிரை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். குறிப்பாக அண்ணன் சீர் திட்டம், தாய் மாமன் தங்க மோதிர திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கூறியிருந்தார்.

Thaymaman Gold Ring

2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஒவ்வொரு திட்டமாக தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஏற்கனவே அண்ணன் சீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது தாய்மாமன் தங்க மோதிர திட்டத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தாய்மாமன் தங்க மோதிரம்

இதற்கான டெண்டரும் விடப்பட்டு தற்போது இரு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனமும், கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனமும் டெண்டரைக் கைப்பற்றியுள்ளன. 70க்கு 30 என்ற அளவில் இவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் ஒரு பைசாவுக்கு இந்த டென்டரை ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் கைப்பற்றியது. செய்கூலி, சேதாரம், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளுக்கு ஒரு மோதிரத்திற்கு ஒரு பைசாவை மட்டும் இந்த நிறுவனம் கோட் செய்தது.

முதல்வர் விஜய்

இதனால் தான் அந்த நிறுவனத்துக்கு இந்த டெண்டர் வழங்கப்பட்டது. இதில் ஜி ஆர் டி, டைட்டன், சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றபோதும் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் அதே ஒரு பைசாவுக்கு நகைகளை செய்து தர ஒப்புக்கொண்டதால் 30 சதவீத பணிகள் அந்த நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தை வரும் 28ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்.

உசிலம்பட்டியில் தொடக்கம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைப்பார் என உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் விஜய் கூறியிருந்தார். இதை அடுத்து அங்கு தொடக்க விழாவுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வந்தது. அதுமட்டுமல்லாமல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு வழங்குவதற்காக சுமார் 1100 தங்க மோதிரங்கள் உசிலம்பட்டிக்கு கொண்டுவரப்பட்டு பலத்த பாதுகாப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

மதுரைக்கு மாற்றம்?

இதற்கிடையே இந்த திட்டத்தில் தற்போது சிறு மாற்றம் இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நிகழ்ச்சி நடைபெறும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை நிலவுவதாக சொல்லப்படுகிறது. மேலும் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் விஜய்யை சந்திக்க வரலாம் என்பதால் நெரிசல் ஏற்படும் சூழல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நிகழ்வு மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை அரசு மருத்துவமனை

மேலும் ஜூன் 22 ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட உள்ள நிலையில் ஏராளமான தாய்மார்கள் வர வேண்டி இருக்கும். மதுரையில் நிகழ்வை வைத்தால் போக்குவரத்துக்கு எளிதாக இருக்கும் என்பதால் இந்த திட்டத்தை தொடங்கும் நிகழ்ச்சியை உசிலம்பட்டியில் இருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றலாமா என மாவட்ட நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது. மேலும் அதனை உறுதி செய்யும் வகையில் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு செய்து முன்னேற்பாடுகளை செய்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+