மீனாட்சியம்மன் கும்பாபிஷேகத்தில் பிடிஆர் தாயார் ஒதுக்கப்பட்ட சர்ச்சை.. இன்று காலில் விழுந்தார் விஜய்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், மதுரையில் இன்று திமுக முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 17ஆம் தேதி நடந்தது. இதற்கான அழைப்பிதழில் அறங்காவலர்கள் குழு உறுப்பினர்களின் பெயர்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில், மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் அரசியல் இருப்பதாக நீதிமன்றமே தெரிவித்திருந்தது.

CM Vijay Seeks Blessings in Madurai Touches Feet of PTR Palanivel Thiagarajan s Mother

மேலும், அறங்காவலர் குழு தலைவரான முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி பழனிவேல் ராஜன், பக்தர்களின் பாதுகாப்பில் சந்தேகம் இருப்பதாக வெளிப்படையாகவே குற்றம்சாட்டினார்.

அதைத்தொடர்ந்து நடந்த மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில், பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கவில்லை, அடிப்படை வசதிகள் இல்லை, போலீசார் கெடுபிடி, அம்மன் தரிசனத்திற்கு விஐபிக்களுக்கு மட்டும் அனுமதி, பாஸ் முறையாக வழங்கப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் வரிசை கட்டி எழுந்தன.

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்வின்போது, அறங்காவலர் குழுத் தலைவரான ருக்மணி பழனிவேல்ராஜன், நின்று கொண்டிருந்த புகைப்படம் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. நீண்ட பாரம்பரியம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ருக்மணி அம்மாள், வயது முதிர்ந்த நிலையில், அமர வைக்கப்படாமல் அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தநிலையில் மதுரையில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக இன்று வந்த முதல்வர் ஜோசப் விஜய், அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தார். அதன் பின்னர் அரசினர் சுற்றுலா மாளிகைக்குச் சென்றார்.

அங்கிருந்து மாலை 4 மணி அளவில் மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் புறப்பட்டார் முதல்வர் விஜய். சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வாகனத்தில் வருகை தந்த அவருக்கு, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோயில் வாசலுக்கு வந்த முதல்வர் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவரும், முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாயாருமான ருக்மணி பழனிவேல் ராஜன், தமிழக முதல்வர் விஜய்க்கு பொன்னாடை வழங்கி வரவேற்றார் முதல்வர் விஜய் ருக்மணி அம்மாளுக்கு பொன்னாடை வழங்கி அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+