அரைகுறை டிரஸ்ஸில் போட்டோ எடுத்து அனுப்பு.. ஏமாந்த சிறுமி.. லாட்ஜில் வைத்து சீரழித்த கயவன்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: "பார்க்கவே ரொம்ப செக்ஸியா இருக்கியே.. அரைகுறை டிரஸ்ஸில் எனக்கு போட்டோ எடுத்து அனுப்பு.." என்று 16 வயது சிறுமியை ஆசைக்காட்டி.. லாட்ஜில் ரூம் போட்டு சீரழித்துள்ளான் காமுகன் ஒருவன்!

மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அவர்.. நாமக்கல்லில் ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறார்.. அதனால் அங்கேயே ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தார்.. எப்போதுமே லேப்டாப்பில்தான் சிறுமி மூழ்கி இருப்பார்.. பேஸ்புக்.. ட்வீட்டர்.. இன்ஸ்டாகிராம் என ஒன்னையும் விட்டு வைக்கவில்லை.

கன்னாபின்னா பதிவுகள், விதவித போட்டோக்களை ஷேர் செய்து கொண்டே இருப்பார் இந்த சிறுமி.. அதிலும் இன்ஸ்டாகிராம்தான் அதிகம்.. இதில் வரும் லைக்குகளுக்காகவே நிறைய மெனக்கட்டார்.

அறிமுகம்

அறிமுகம்

அந்த சமயத்தில்தான் கல்லூரி மாணவன் அல்ஹசன் அறிமுகமானார்.. மதுரை தெப்பக்குளம் பகுதியில்தான் ஹசன் வீடு உள்ளது.. இன்ஸ்டாகிராமில் சிறுமியை ஃபாலோ செய்து வந்துள்ளார். சிறுமி என்ன்னன் போட்டோ போடுகிறாரோ, அதற்கெல்லாம் கமெண்ட் போட்டுவிடுவார்.. அதுவும் சிறுமியை மோசமாக வர்ணித்து!

சிக்கல்

சிக்கல்

தன்னை வர்ணிக்கவும் சிறுமிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.. ஒரு கட்டத்தில் ஹசன் கமெண்ட்டுகள் வராதா என்று ஏங்கும் நிலைமைக்கு சிறுமி ஆளானார்.. நட்பு அதிகரித்தது.. இன்ஸ்டாகிராமில் தனியாக ஒரு அக்கவுண்ட் 2 பேரும் ஆரம்பிக்கும் அளவுக்கு வந்துவிட்டனர்.. அப்போதுதான் சிக்கல் அதிகமாக எழுந்தது.

நடிகைகள்

நடிகைகள்

"நீ ரொம்ப செக்ஸியா இருக்கே.. கிளாமரா அதாவது அரைகுறை டிரஸ் போட்டு போட்டோக்களை அனுப்பு.. எப்படி இருக்கிறேன்னு பார்க்கணும்.. அப்படி நீ டிரஸ் பண்ணினால் ஹிந்தி நடிகைகள் போலவே இருப்பே" என்று சொல்லி ஆசை காட்டவும், அதன்படியே சிறுமி அனுப்ப ஆரம்பித்தார்... இது நேரில் சந்தித்து பேசும் அளவுக்கு வந்து நின்றது. இதற்காக நாமக்கல் சென்று ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கினார் ஹசன்.. அங்கு சிறுமியையும் வரவழைத்தார்.

அரைகுறை டிரஸ்

அரைகுறை டிரஸ்

லாட்ஜ் ரூம் கதவை பூட்டி, அத்துமீறவும் ஆரம்பித்தார்.. அப்போதுதான் சிறுமிக்கு விபரீதம் புரிந்து அலறினார்.. ஆசைக்கு இணங்காவிட்டாலோ, விஷயத்தை வெளியில் சொன்னாலோ, அரைகுறை டிரஸ் உள்ள போட்டோவை சோஷியல் மீடியாவில் போட்டுவிடுவேன் என்று மிரட்டினார்.. இறுதியில் சிறுமி சிக்கி சீரழிந்தார்!

கர்ப்பம்

கர்ப்பம்

சில நாட்கள் கழிந்த நிலையில், சிறுமி திடீரென தலைசுற்றி கீழே விழ... கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததும் குடும்பத்தினர் அதிர்ந்து போய்விட்டனர்.. அப்போதுதான் ஹசனின் மிரட்டலும், பலாத்காரமும் தெரியவந்தது.. இதையடுத்து, மதுரை தெற்கு மகளிர் போலீசில் புகார் செய்யப்படவும், அல்ஹசனை ரவுண்டு கட்டி தூக்கினர்.. இப்போது சிறையில் உள்ளார் ஹசன்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+