"தலாக்" வாங்கிட்டு வா.. பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டிய முதலாளி.. சரமாரி அடி.. கைது!
பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்
மதுரை: "தலாக்" வாங்கிட்டு வரும்படி நிறுவன அதிகாரி ஒருவர் இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி, துன்புறுத்தி உள்ளார்.. அப்பெண்ணை நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோவும் எடுத்து மிரட்டி உள்ளார்.. இறுதியில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.. மதுரையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை தந்து வருகிறது.
மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்.. 28 வயதாகிறது.. அய்யர்பங்களா பகுதியில் "ஸ்பைடர்" என்ற டிடெக்டிவ் ஏஜென்சியை சொந்தமாக வைத்து நடத்தி வந்துள்ளார்.
இந்த கம்பெனிக்கு வேலைக்கு ஆட்கள் எடுக்க முடிவு செய்து, சோஷியல் மீடியாவில் ஒரு விளம்பரத்தையும் செய்திருந்தார்.. இந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு, மதுரை செல்லூரை சேர்ந்த பெண் ஒருவர் அந்த கம்பெனிக்கு அப்ளிக்கேஷன் போட்டுள்ளார். இவர் சார்ட்டர்ட் அக்கவுண்ட் படித்துள்ளார்.

மதுரை
பூர்வீகம் ஆந்திராவை சேர்ந்தவர்.. சோஷியல் மீடியாவில் தன்னுடைய நேரத்தை செலவிட்டபோது, மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் காதல் மலர்ந்துள்ளது.. அந்த இளைஞரோ பணக்காரன் போல கெட்டப்-களுடன் வீடியோ போடவும், இந்த பெண் நிஜமாகவே அவரை பெரிய வீட்டு பையன் என நினைத்து காதலித்துள்ளார்.

லோடுமேன்
இறுதியில் அவரை நம்பி, வீட்டை விட்டு வெளியேறி, அந்த இளைஞரையே கல்யாணமும் செய்து கொண்டார்.. அந்த இளைஞருக்காக சமூகம் மாறி, தன் பெயரையும் மாற்றி கொண்டுள்ளார்.. கடைசியில்தான் அந்த இளைஞர் லோடுமேன் என்றும், குடும்பத்தில் வறுமை தாண்டவமாடுகிறது என்றும் தெரியவந்துள்ளது.. நம்பி வந்தபிறகு வேறு வழியில்லாமல் அவருடனேயே குடும்பம் நடத்தினார்.. வீட்டில் கஷ்டம் அதிகமாகவும்தான் இந்த வேலைக்கு முயற்சித்துள்ளார்.

அலறல்
ஆனந்திடம் குடும்ப கஷ்டத்தையும் சொல்லி அழுதுள்ளார்... இறுதியில் அவர் அந்த கம்பெனியில் தேர்ந்தெடுத்து விட்டனர்.. கொஞ்ச நாளைக்கு முன்பு டிடெக்டிவ் கம்பெனிக்குள் வேலைக்கும் சேர்ந்துவிட்டார்.. ஒருநாள் ஆனந்த் வர சொல்லியதால் ஆபீசுக்குள் உள்ளே நுழைந்ததுமே அந்த ரூம் கதவை ஆனந்த் படாரென அடைத்துவிட்டாராம்.. அருகில் சென்று தவறாகவும் நடக்க முயற்சித்துள்ளதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த அலறி உள்ளார்.

நிர்வாணம்
இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்தன் கீழே கிடந்த கட்டையை எடுத்து அநத் பெண்ணை அடித்துள்ளார்.. துணிகளை எல்லாம் இழுத்து பிடித்து அவிழ்த்து நிர்வாணமாக நிற்க வைத்துள்ளார்.. அதன்பிறகு அவரை வீடியோவும் எடுத்து, திரும்பவும் ஆசைக்கு இணங்குமாறும், இல்லையென்றால் வீடியோவை வெளியிட்டுவிடுவதாகவும் மிரட்டி உள்ளார். மேலும் கணவனிடம் இருந்து தலாக் பெற்று வந்துவிடும்படியும் உள்ளார்.

தலாக்
அதனால் அந்த பெண், நிர்வாண வீடியோ வெளியே வந்துவிடுமோ என்ற பயத்தில் வீட்டில் தலாக் வேண்டும் என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்.. குடும்பத்தினரும் ஒன்றும் புரியாமல் எதற்காக திடீரென தலாக் கேட்கிறாய் என்று விசாரிக்கவும்தான் நடந்ததை சொல்லி அழுதுள்ளார்.. இதைக் கேட்டு ஷாக் ஆன கணவன், நண்பர்களை அழைத்து கொண்டு ஆனந்தை சரமாரியாக தாக்கியுள்ளார்... இதனால் ஆனந்த் அந்த பெண்ணின் கணவர் மீது போலீசில் புகார் தந்தார்.

கைது
இதை கேள்விப்பட்ட அந்த பெண்ணும் போலீசுக்கு சென்று நடந்த அனைத்தையும் சொல்லி மற்றொரு புகார் அளித்துள்ளார். இரு தரப்பினரின் புகாரையும் போலீசார் பெற்று கொண்டு விசாரணையும் நடத்தினர்.. இறுதியில் ஆனந்ததை கைது செய்தனர்.. அவரது ஆபீசில் உள்ள சிசிடிவி கேமிராவையும் ஆய்வு செய்தனர்.. கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகளையும் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை தந்து வருகிறது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications