நியோமேக்ஸ் மெகா மோசடி.. 3 இயக்குநர்களுக்கு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவு!
மதுரை: நியோமேக்ஸ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 3 இயக்குநர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை தலைமையிடமாக கொண்டு நியோமேக்ஸ் பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு பாளையங்கோட்டை, கோவில்பட்டி, திருச்சி, தஞ்சை என பல மாவட்டங்களில் அலுவலகங்கள் செயல்பட்டன. இதன் இயக்குநர்களாக வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், மாதம் 12% முதல் 30% வரை வட்டி தருவதாகவும், இரண்டரை முதல் 3 ஆண்டுகளில் முதலீடு செய்த பணம் இரட்டிப்பாக தரப்படும் எனக் ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை ஈர்த்தனர். இதை நம்பி பலர் பல கோடிக்கு முதலீடுகளை செய்துள்ளனர். ஆனால் கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றி உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.
புகார்களின் அடிப்படையில் 17 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்களான பாலசுப்ரமணியன், பழனிசாமி, அசோக் மேத்தா, சார்லஸ் கிளோமேக்ஸ் , தியாகராஜன், கமலகண்ணன், நாராயணசாமி, மணிவண்ணன் ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் நியோமேக்ஸ் இயக்குநர்களான சைமன் ராஜா, கபில் ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என பொருளாதாரம் குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதி, கைது செய்யப்பட்ட மூன்று நபர்களுக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் தினமும் காலை 10 மணிக்கு பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், தலா ஒரு லட்ச ரூபாய் பிணைத்தொகை செலுத்த வேண்டும் எனவும், காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications