அதிமுகவுக்கு எதுக்கு இந்த வேலை.. மதுரையில் காமெடி.. மாணிக்கம் தாகூர் பதிலடி

Subscribe to Oneindia Tamil

மதுரை: காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், சிபிஐ, சிபிம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. ஆட்சியை இழந்து, கூட்டணி உடைந்ததால் தவெக மற்றும் கூட்டணி கட்சியினர் மீது திமுக கோபத்தில் உள்ளது. எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாததால் அதிமுக பின்னடைவை சந்தித்து வருகிறது. இருவரும் பரஸ்பரம் மாறி மாறி தவெகவை விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் மக்கள் பிரச்சனையை பற்றி பேசாமல் அமித்ஷா திமுகவாக மாறி அதிமுக காமெடி செய்வதாக மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

மதுரையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் ஜோசியக்காரங்க பேசறதை எல்லாம் நாம் சீரியஸாக எடுக்க வேண்டியதில்லை. அது ஜோசியக்காரர்களின் ஆருடம். ஜோசியத்தை பற்றி பேசினால் பல சேனல்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி கொண்டிருக்க வேண்டும். இதைவிட சீரியஸான வேலை நமக்கு நிறைய இருக்கிறது. இது சீரியஸ் இல்லாத மேட்டர். தவெக பொருளாரும், அமைச்சருமான வெங்கட்ராமன், இது தனி நபர்களின் கருத்து. கட்சியின் நிலை அதுவல்ல என்று கூறியுள்ளார்.

Manickam Tagore ADMK

ராகுல் காந்தி பிரதமர்

தவெகவின் நிலை இது கிடையாது என தெரிகிறது. தவெக இனி நிலை எடுக்க வேண்டும். தமிழ்நாடு காங்கிரஸ் நிலை தெளிவாக உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக விஜயும், டெல்லி நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி அரசு அமைய வேண்டும். அதை நோக்கி தான் பயணித்து கொண்டிருக்கிறோம். விஜய் முதலமைச்சராக வேண்டும் என்கிற முதல் இலக்கை அடைந்துவிட்டோம். 2029 தேர்தலில் ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் இலக்குக்காக அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்.

தமிழகத்தின் நலனுக்காக தான் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. இந்திராகாந்தி பண்டாரிநாயக் ஒப்பந்தப்படி அதற்கு பதிலாக வளமையான பகுதி நமக்கு கொடுக்கப்பட்டது வரலாற்று உண்மை. அதில் பாதியை கட் காப்பி செய்துவிட்டு அரசியல் செய்வது சில கட்சிகளின் வேலையாகிவிட்டது. நம் கடற்படையும், மத்திய வெளியுறவுத்துறையும் ஒப்பந்தத்தை செயல்படுத்த இலங்கை அரசிடம் கடுமையாக பேச வேண்டும். மீனவர்கள் மீதான தாக்குதல் குறைய கடற்படை உடனிருக்க வேண்டும்.

அதிமுக காமெடி

ராகுல் காந்தி பிரதமரானால் இந்த நிலை மாறும். மீனவர்களுக்கு பாதுகாப்பு ஏற்படும். சொல்ல வேண்டிய மொழியில் இலங்கைக்கு உணர்த்துவோம். சட்டமன்றத்தில் பெண் சபாநாயகர், துணை சபாநாயகராக பெண் இல்லாதது கவலைக்குரிய விஷயம் தான். பெண் உரிமை பேசி, 50 வருடங்கள் ஆட்சியில் இருந்த திராவிட கட்சிகள் பெண் சபாநாயகரை உருவாக்கவில்லை. முதல்முறையாக சபாநாயகராக ஒரு பெண் அமர்ந்தது புதிய தொடக்கமாக இருக்க வேண்டும்.

வரும்காலத்தில் முழுநேர சபாநாயகரை விஜய் நியமிப்பார் என்கிற நம்பிக்கை உள்ளது. அமித்ஷா அண்ணா திமுகவுக்கு விஷயம் இல்லாமல் போய்விட்டது. மக்கள் பிரச்சனையை பற்றி அவர்களுக்கு கவலையில்லை. விலைவாசி உயர்வு பற்றி எல்லாம் பேசவில்லை. இடஒதுக்கீட்டை பிடுங்கும் மோடியை எதிர்த்து பேச திராணி இல்லை. ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டு. தன் கருத்தை சபையிலேயே சோழவந்தான் எம்எல்ஏ கருத்தை வாபஸ் பெற்றும், அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தி காமெடி செய்கிறது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+