முதலில் பஞ்சாயத்து தலைவராகுங்கள்.. பின்னர் தலைவரென சொல்லலாம்.. அண்ணாமலைக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி!
நான் தான் தலைவர் என்று அண்ணாமலை கூறுவது வேடிக்கையாக இருப்பதாக மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
மதுரை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முதலில் பஞ்சாயத்து தேர்தலில் நின்று வெற்றிபெற்ற பின், தலைவர் என்று கூறட்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். அரவக்குறிச்சி தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட அண்ணாமலை, நான் தான் தலைவர் என்று கூறுவது வேடிக்கையாக இருப்பதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
கடந்த 4 நாட்களாக தமிழ்நாடு பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர். இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பாஜகவில் இருந்து வெளியேறும் பலரும், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையையே குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், கட்சியில் இருந்து போனால் தான் புதியவர்களுக்கு பொறுப்பு தர முடியும். அடுத்த தலைவர்கள் உருவார்கள். திராவிட கட்சிகளைச் சார்ந்து தான் பாஜக வளரும் என்று குற்றச்சாட்டு இருந்தது.

அண்ணாமலை பேட்டி
பாஜகவில் இருந்து ஆட்களை அழைத்து சென்றால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலைமை உருவாகி உள்ளது. இது பாஜகவின் வளர்ச்சியை காட்டுகிறது. யாரை வேண்டுமானாலும் அழைத்து செல்லட்டும். கொள்கை பிடிப்பு உள்ளவர்கள் கட்சியில் இருப்பார்கள். பாஜகவில் இருந்த நிர்வாகிகளைச் சேர்த்துதான் பெரிய கட்சி என காட்ட வேண்டுமா? அந்த நிலைமைக்கு உங்கள் கட்சி வந்து விட்டதா என மக்கள் நினைக்கின்றனர்.

நான் தலைவர்
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும். தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை. அண்ணாமலை தலைவராக வந்துள்ளேன். ஜெயலலிதா எப்படி முடிவு எடுப்பாரோ அதுப்போல் தான் என் முடிவு இருக்கும். தலைவர்கள் முடிவு எடுத்தால் நான்கு பேர் கோபித்து கொண்டு வெளியே செல்லத்தான் செய்வார்கள் என்று விளக்கம் அளித்தார். அண்ணாமலையின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

அண்ணாமலை பற்றி மாணிக்கம் தாகூர்
இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மகளிர் தின விழாவினை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கலந்துகொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து மாணிக்கம் தாகூர் கூறுகையில், பாஜக தலைவர் அண்ணாமலை முதலில் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும் , அதன் பின்பு பஞ்சாயத்து தலைவர் என்று சொல்லட்டும்.

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்
இதனிடையே நான்தான் தலைவர், நான் தான் தலைவர் எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. மேலும் அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிட்ட அண்ணாமலை, அங்குள்ள மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என்பதை மறந்துவிடக்கூடாது என்று தெரிவித்தார். தொடர்ந்து திருமங்கலம் - விமான நிலையச் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு, தற்போதுள்ள திமுக அரசு பணிகளை செய்வதற்கு மும்முரம் காட்டி வருகிறது.

3 முறை பூமி பூஜை செய்த ஆர்பி உதயகுமார்
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அமைச்சராகவும், எம்எல்ஏவாகவும் உள்ள ஆர்பி உதயகுமார் மூன்று முறை பூமி பூஜை செய்தும் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்வது குறித்து சில மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் நிதி கட்கரியிடம் பேசினேன். அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு ஏப்ரல் மாதம் ஆகும் என தெரிவித்துள்ளதால், விரைவில் தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்தார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications