சமூக தொற்று வந்து விட்டதா.. மீனாட்சி அம்மன் கோவில் எலக்ட்ரீஷியன் உள்பட 3 பேருக்கு கொரோனா!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஊழியர்கள் 3 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது
மதுரை: மீனாட்சியம்மன் கோவில் எலக்ட்ரீஷியன் உட்பட 3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது... அடுத்தடுத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதால் சமூக தொற்று வந்துவிட்டதோ என்ற அச்சம் மதுரை மாவட்டத்தில் ஏற்பட்டு வருகிறது!!
மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கோயிலில் பணியாற்றும் தீயணைப்பு படை வீரர் ஒருவர் உள்பட அக்கோயில் ஊழியர்கள் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வாரம் மீனாட்சி அம்மன் கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர் ஒருவரின் தாயார் கொரோனாவைரஸ் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.. இது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த பட்டர் வெளிநாடு சென்று வந்ததாகவும், அதன்மூலம் அவரது அம்மாவுக்கு தொற்று பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது.
எனினும் ஒட்டு மொத்தமாக மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்ப்பட்டு, 2 கிமீ பகுதிக்கு கோயில் பகுதி சீல் வைக்கப்பட்டது.. கோயில் முழுமையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல, பட்டர் குடும்பத்திற்கு அருகில் வசிக்கும் மற்ற எல்லா வீடுகளுக்கும் தனித்தனியாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், அக்கோயிலில் பணியாற்றிய எல்லா ஊழியர்களுக்குமே கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனை முடிவில், கோயிலில் பணிபுரியும் எலக்ட்ரிசியன், கம்ப்யூட்டர் உதவியாளர், தீயணைப்பு படை வீரர் என 3 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.. இவர்கள் அனைவரும் உடனடியாக பரிசோதனைக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
கோயிலில் அடுத்தடுத்து ஊழியர்கள் பாதிப்பதால், மதுரை மேல சித்திரை வீதியில் உள்ள தீயணைப்பு நிலையம் உடனடியாக மூடப்பட்டது. அங்குள்ள வீரர்கள் அனைவருக்கும் மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் அதிரடியாக டெஸ்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே மதுரை தெற்குவாசல் காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமை காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக மதுரை மாநகரில் ஏற்கனவே தெற்குவாசல் காவல்நிலையம் மூடப்பட்டுள்ளது.
Recommended Video
மதுரை மாவட்டத்தில் மட்டும் கடந்த 4 நாட்களில் போலீசார் 2 பேருக்கும், தீயணைப்பு வீரர் ஒருவர், 3 ஒப்பந்த சுகாதார பணியாளர்கள், ஒரு அரசு ஆஸ்பத்திரி நர்ஸ் என தடுப்பு பணிகளில் ஈடுபட்டோருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மதுரையில் சமூக தொற்றுக்கான நிலைக்கு சென்றுவிட்டதாக கருதி பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருந்துவருகின்றனர். இருந்தாலும், இது இதனை விரைவில் கட்டுப்படுத்திவிடலாம் என்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து அதற்கான முயற்சியில் இறங்கி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications