ஓராளவுக்குத் தான் பொறுமை காக்க முடியும்.. குதிரை பேரத்துக்கு காரணமே ஆளுநர் தான்.. பேபி போட்ட குண்டு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தனிப்பெரும்பான்மை உள்ள கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்பது தான் சட்டம். ஆனால் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் தாமதிக்கிறார். ஆளுநர் த.வெ.க ஆட்சியமைக்க அழைக்காதது தவறு.. நாங்கள் குதிரை பேரத்திற்கு எதிரானவர்கள், தமிழகத்தில் ஆளுநரின் தாமதம் தான் குதிரை பேரத்திற்கு வழிவகுக்கிறது என கூறியுள்ளார் சிபிஎம் தேசிய செயலாளர் எம்.ஏ.பேபி.

தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சியமைக்க தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவை பெற முடியாததால், ஆட்சியமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.

காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவு அளித்துள்ளதால், தவெக பலம் 117 வரை உயர்ந்துள்ளது. ஆனால், இன்னும் ஒரு உறுப்பினரின் ஆதரவு தேவைப்படுவதால், விஜய் தொடர்ந்து பல்வேறு தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

CPM MA Baby Vijay

எம்.ஏ.பேபி

இந்நிலையில், தமிழகத்தில் ஆளுநரின் தாமதம் தான் குதிரை பேரத்திற்கு வழிவகுக்கிறது என கூறியுள்ளார் சிபிஎம் தேசிய செயலாளர் எம்.ஏ.பேபி. மதுரை நரிமேடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மார்க்சிய ஆசான் தோழர் எஸ்.ஏ.பி நூல் வெளியீட்டு விழாவீல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி கலந்துகொண்டு நூலை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் கே. பாலபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தனிப்பெரும்பான்மை

பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பேபி செய்தியாளர்களை சந்தித்த போது," தனிப்பெரும்பான்மை உள்ள கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்பது தான் சட்டம் ஆனால் ஆளுநர் தாமதிக்கிறார். ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. தாழ்மையான சொல்கிறேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் எல்லா நடவடிக்கைகளையும் தாண்டி மெஜாரிட்டி கேட்கிறார்.

ஆளுநர்

மக்களின் முடிவை ஆதரிக்க கேட்கிறோம். மத்தியில் தவறனா வழி அமைத்து மாற்றி அமைக்க சூழ்ச்சியை கையாள நினைக்கிறது. மக்கள் அளித்துள்ள தீர்ப்புக்கு ஆதராவாக நாங்கள் டிவிகேயை ஆதரிக்கிறோம். நாங்கள் தவெகவுக்கு ஆதரவளிக்க எங்களது கூட்டணி கட்சியான திமுகவிடம் கேட்டு தான் வந்தோம். அமமுக அளித்துள்ள புகார் குறித்து எங்களுக்கு சரியாக தெரியவில்லை. அதிமுகவுக்கு - திமுக ஆதரவளித்து ஆட்சி அமைப்பது குறித்து யூகத்தில் பேசுகிறார்கள்.

குதிரை பேரம்

பிஜேபி பின்புற வழியாக அதிமுகவை கொண்டு வர பார்க்கிறது. நாங்கள் திமுகவுடன் நல்ல கூட்டணியில் இருக்கிறோம். தவெகவுக்கு ஆதரவளிப்பது நீங்கள் சுதந்திரமாக முடிவெடுத்து கொள்ளலாம் என ஸ்டாலின் கூறியதன் அடிப்படையில் தவெகவுக்கு ஆதரவளித்துள்ளோம். தனிப்பெரும்பான்மை உள்ள கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்பது தான் சட்டம் ஆனால் ஆளுநர் தாமதிக்கிறார். ஆளுநர் த.வெ.க ஆட்சியமைக்க அழைக்காதது தவறு. நாங்கள் குதிரை பேரத்திற்கு எதிரானவர்கள். ஆளுநரின் தாமதம் தான் குதிரை பேரத்திற்கு வழிவகுக்கிறது" எனக் கூறியுள்ளார் எம்.எம்.பேபி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+