ஆண்கள் கழிப்பறைக்கு தோனியின் படம்.. ரசிகர்கள் கடும் எதிர்ப்பு! சர்ச்சையில் சிக்கிய மதுரை மாநகராட்சி!
மதுரை: மதுரை மாநகராட்சி ஆண்கள் கழிவறையில் கிரிக்கெட் வீரர் தோனியின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை என்பது அரசியல் கட்சியினருக்கு பல்வேறு திருப்புமுனைகளை ஏற்படுத்தும். மதுரையில் அரசியல் கட்சி மாநாடு என்றாலே களைகட்டும். அதே வேளையில் மதுரையில் சித்திரை திருவிழா உள்ளிட்டவையும் பிரபலமாகும்.
மதுரை தூங்காநகரம் என்பதால் 24 மணி நேரமும் சைவ மற்றும் அசைவ உணவுகள் கிடைக்கும். அது போல் இந்த மதுரையில் நடிகர், நடிகைகள், அரசியல் கட்சியினர் போஸ்டர் ஒட்டி தமிழகத்தையே திரும்பி பார்க்க வைப்பார்கள்.

விஜய்
இதற்கு உதாரணமாக விஜய்யை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்து போஸ்டர் ஒட்டியது தமிழகத்தில் பெரும பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அது போல் இந்த போஸ்டர் கலாச்சாரத்திற்கு அஜித்தும் தப்பவில்லை. அண்மையில் கூட மதுரை மாநகராட்சி ராஜாஜி சிறுவர் பூங்கா வளாகத்திற்குள் வைக்கப்பட்ட பேனர் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது.

நாய் காதல்
அதில் 'நாய் காதல்' செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரித்து அறிவிப்பு பலகை வைத்தது பரபரப்பையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. இந்த போர்டால் கடும் விமர்சனங்கள் எழுந்ததால் நாய் காதல் என்ற சர்ச்சைக்குரிய போர்டு நீக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சி
இந்த நிலையில் மதுரை மாநகராட்சி ஆண்கள் கழிவறையில் கிரிக்கெட் வீரர் தோனியின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள ஆண்கள் கழிவறையில் தோனியின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் கோபம்
இதை பார்த்த ரசிகர்கள் கடும் கோபமடைந்து சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். மாநகராட்சியின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. உடனே தோனியின் புகைப்படத்தை நீக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆண், பெண் என படம் வரைந்தாலே கழிவறையை அடையாளம் கண்டுக் கொள்ளும் நிலையில் எதற்காக தோனி புகைப்படம் வைக்க வேண்டும் என்றெல்லாம் கேள்வி எழுந்தது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications