கவுன்சிலர் சீட்.. மதுரையில் நிர்மல்குமார் தேதிக்கு காத்திருக்கும் நிர்வாகிகள்! அலப்பறை காட்டும் தவெக

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் தவெக சார்பாக கவுன்சிலர் சீட் பெற தீவிரமாக இருக்கும் நபர்கள், அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்த தேதி கேட்டு காத்திருக்கின்றனர். முதற்கட்டமாக திருப்பரங்குன்றம் தொகுதியில் வார்டு வாரியாக தவெகவினர் பொதுக்கூட்டம் நடத்த தொடங்கி இருக்கின்றனர். இதனால் கவுன்சிலர் சீட் போட்டியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது அக்கட்சியினர் மத்தியில் விவாதமாகி இருக்கிறது.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக தவெக தீவிரமாக தயாராகி வருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற அடிப்படை கட்டமைப்பு அத்தியாவசியம். இதனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ள பொறுப்பு அமைச்சர்கள் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை மும்முரமாக செய்து வருகின்றனர்.

CTR Nirmal Kumar

அதேபோல் உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து அதிமுகவினர் பலரும் தவெக பக்கம் ஒதுங்க தொடங்கி இருக்கின்றனர். இதனால் தவெகவில் கவுன்சிலர் சீட்டை கைப்பற்ற போட்டி ஏற்பட்டுள்ளது. இதனிடையே கவுன்சிலர் சீட்டுக்கான கலெக்‌ஷனும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. இந்த நிலையில் கவுன்சிலர் சீட்டுக்கான ரேஸில் பணம் இருக்கும் நபர்கள் பலரும் இணைந்துள்ளனர்.

லட்சக்கணக்கில் பணம் செலவழித்து அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரை வைத்து பொதுக் கூட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் இந்த பொதுக்கூட்டத்தை நடத்த சிடிஆர் நிர்மல்குமார் அறிவுறுத்தி இருக்கிறார். அந்தப் பொதுக்கூட்ட மேடையை ராம்ப் வாக் மாடலில் அமைக்கவும் உத்தரவிட்டிருக்கிறார்.

இதன் மூலமாக தவெக கூட்டத்திற்கு வருவோருடன் எளிதாக செல்ஃபி எடுக்க முடியும் என்பது சிடிஆர் நிர்மல்குமாரின் கணக்காக இருக்கிறது. இதனால் ஒவ்வொரு வார்டிலும் கட்சிக்கு உழைத்தவர்கள் அல்லாமல், மாவட்டச் செயலாளர் மூலமாக பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும் நடைமுறை தொடங்கி இருக்கிறது. இதன் மூலமாக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாருடன் நெருக்கமாக முடியும்.

இதனால் தவெகவிலும் பணம் இருப்பவர்கள் பதவிக்கு வருவது தொடர் கதையாகி இருக்கிறது. அதேபோல் பொதுக்கூட்டம் முடிவடைந்த பின் இப்போதே கவுன்சிலர் சீட் எனக்கு தான் என்று நிர்வாகிகள் பலரும் அலப்பறையை தொடங்கியுள்ளனர். இதனை தவெக தலைமை உணர்ந்து கட்டுப்படுத்துமா என்பதே கேள்வியாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+