கடுகடுத்த பிடிஆர்.. "சர்வாதிகாரி போல பேசும் மத்திய அமைச்சர்.." புதிய கல்வி கொள்கை குறித்து ஆவேசம்
மதுரை: புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே நிதி தருவோம் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது தமிழக அரசியலில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே மத்திய அமைச்சரின் பேச்சைக் கடுமையாக விமர்சித்துள்ள தமிழக ஐடி துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நீதிமன்றம் நிச்சயம் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகக் குறிப்பிட்டார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் புதிய கல்விக் கொள்கை குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்தார். மேலும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சு சர்வாதிகாரத்தனமானது என சாடியுள்ளார்.

அமைச்சர் பிடிஆர்
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "பல பத்தாண்டுகளாகவே பார்த்தோம் என்றால் கூட தேசிய அளவில் எங்குக் கல்வி சிறப்பாக இருக்கிறது?, எத்தனை சதவீதம் பேர் படிக்கிறார்கள்? எத்தனை பட்டதாரிகள் உருவாகிறார்கள்? என எந்தவொரு அளவுகோல் எடுத்தாலும் தென்மாநிலங்களும், குறிப்பாகத் தமிழ்நாடு தான் முன்னணியில் இருக்கிறது.
தமிழ்நாடு உடன் ஒப்பிடும் போது உத்தரப் பிரதேசம், பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் கல்வி பாதி கூட இல்லை. அப்படியிருக்கும் போது அவர்கள் சொல்லும் கொள்கையைத் தான் பின்பற்ற வேண்டும் என்று சொல்வது அதிர்ச்சியாகவே இருக்கிறது. மழலையர் பள்ளியில் இருக்கும் நபர் இளங்கலை படிக்கும் நபருக்குச் சொல்லித் தருவது போலத் தான் இது இருக்கிறது.
இரு மொழி கொள்கை
தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் பேரறிஞர் அண்ணா கூறியபடி இரு மொழி கொள்கையே பின்பற்றப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சர்வதேச அளவில் முக்கிய வேலைகளில் இருக்கிறார்கள். சர்வதேச கார்ப்ரேட் நிறுவனங்களில் முக்கிய பதவிகளிலும் இருக்கிறார்கள். இரு மொழி கொள்கையால் இதுபோல பல நிறைகள் உள்ளன.
வடமாநிலங்களால் தங்கள் மக்களுக்கு இரு மொழிகளைக் கூடச் சொல்லித் தர முடியவில்லை. இந்நேரம் அங்குள்ளவர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தை கற்றிருந்தால் அவர்கள் நம் மீது இந்தியைத் திணிக்கும் தேவையே உருவாகி இருக்காது. எனவே, ஒரு மொழி கொள்கை கூட சரியாக அமல்படுத்தாத மாநிலங்கள் நம்மைப் போல இரு மொழி கொள்கையைச் சிறப்பாக அமல்படுத்தும் மாநிலங்களை என்ன செய்ய வேண்டும் என சொல்வதை ஏற்க முடியாது.
சர்வாதிகாரம்
இதையெல்லாம் தாண்டி அரசியலமைப்பின்படி, மாநில அரசுகளுக்கு சில உரிமை இருக்கிறது.. அதேபோல மத்திய அரசுக்கு என சில உரிமைகள் உள்ளன. இது தவிர பொது பட்டியலில் சில விஷயங்கள் உள்ளன. அதேநேரம் பாலிசி என்பது கொள்கை.. அதாவது ஒரு விருப்பம்.. சட்டப்படி கட்டாயம் என்று இல்லை. அப்படி இருக்கும் பொது கொள்கையை அமல்படுத்தவில்லை என்றால் ஜனநாயகபடி வரவேண்டிய நிதியைத் தர மாட்டோம் என்பது கொடூரமான சர்வாதிகாரி செய்யும் வேலை.
நல்லதுதான்
நாங்கள் சட்டப்படி நடக்க மாட்டோம்.. மக்கள் வரிப் பணத்தை விருப்பத்தின் அடிப்படையில் வைத்து அரசியல் செய்வோம் என்பதை மத்திய அமைச்சரே சொல்வது ஒரு நல்ல விஷயமாகவே பார்க்கிறேன். அப்போது தான் மக்களுக்கு இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரியும். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சரியான கேள்விகளையே எழுப்பியுள்ளார். மத்திய அமைச்சரின் இந்த பேச்சு அரசியலமைப்பிற்கு எதிரானது. மத்திய அமைச்சரின் இந்த பேச்சை நிச்சயம் உச்ச நீதிமன்றமோ அல்லது வேறு நீதிமன்றங்களோ கண்டிக்கும் என்றே நினைக்கிறேன்" என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications