திண்டுக்கல்லு திண்டுக்கல்லு பாடலுக்கு வைப் ஆன சீனிவாசன்.. வேணாம்ணேனு கன்டரோல் செய்த செங்கோட்டையன்
மதுரை: மதுரை மாநாட்டில் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி- செந்தில் கணேஷ் தம்பதி பாடிய திண்டுக்கல்லு திண்டுக்கல்லு பாடலுக்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வைப் ஆகி ஆட தொடங்கினார்.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர் தலைமையில் முதல் மாநாடு மதுரையில் நடந்தது. இந்த மாநாட்டில காலை 8 மணிக்கு அதிமுக கொடியை ஏற்றி வைத்த எடப்பாடி பழனிசாமி பிறகு அவருடைய ஹோட்டல் அறைக்கு சென்றுவிட்டார்.

அத்துடன் அவர் மாலையில் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் மாலை வரை தொண்டர்களின் பொழுதுபோக்கிற்காக பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் தேனிசை தென்றல் தேவாவின் இசைக் கச்சேரி நிகழ்ந்தது.
அது போல் நாட்டுப்புற கலைஞர்கள் சூப்பர் சிங்கர் ஜோடி ராஜலட்சுமி- செந்தில் கணேஷ் கச்சேரியும் இடம்பெற்றிருந்தது. மேலும் காமெடியன்கள் ரோபோ சங்கர், மதுரை முத்து, ராமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ரோபோ சங்கர் எம்ஜிஆர் மாதிரி பேசியதால் அங்கிருந்த தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அது போல் எம்ஜிஆர், ஜெயலலிதா வேடமணிந்து வந்த இருவரை பார்த்ததும் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். சிலர் ஜெயலலிதா வேடத்தில் இருந்த பெண்ணை பார்த்து கண் கலங்கினர். இந்த நிலையில் மதுரை முத்து ஸ்டான்ட் அப் காமெடி செய்து அசத்தினார். அவரும் பாடல் பாடியிருந்தார். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என மாநாடே திருவிழா கோலம் பூண்டது.
இந்த நிலையில் ராஜலட்சுமி- செந்தில் கணேஷ் குத்து பாடல்களை பாடினர். அந்த வகையில் திண்டுக்கல் சாரதி படத்தில் கருணாஸ் மனைவி கிரேஸ் பாடிய திண்டுக்கல்லு திண்டுக்கல்லு மதுரை ஜில்லா உனக்கு என்ற பாடலை பாடிய போது தொண்டர்கள் எழுந்து உற்சாகமாக நடனமாடினர்.

அப்போது அவங்க ஊரு பாட்டாச்சே முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சும்மா இருப்பாரா! அவரும் எதையோ சாப்பிட்டுக் கொண்டே தாளம் போட்டபடியே ஆடினார். உடனே பக்கத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவரை கன்ட்ரோல் செய்துவிட்டார். இருந்தாலும் திண்டுக்கல்லாரால் உட்கார முடியவில்லை. அந்த அளவுக்கு "வைப்"புடன் இருந்தார்.
அது போல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் ஒயிலாட்டம் ஆடி மகிழ்வித்தார். மொத்தத்தில் மதுரை மாநாட்டில் தரமில்லாத சுவையில்லாத உணவு உள்ளிட்ட சில விஷயங்களை தவிர தொண்டர்கள மிகவும் கொண்டாட்ட மோடிலேயே இருந்தார்கள்.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications